கனடாவில் தேர்தல் வேட்பாளர்களின் பேஸ்புக் கணக்குகள் பாதுகாப்பானதாக இயங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் – ஃபேஸ்புக்

Facebook Inc நிறுவனம் கனடாவில் வரவிருக்கும் கூட்டாட்சி தேர்தலுக்கான தனது திட்டங்களை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்பி வரும் பதிவுகளையும், மையப்படுத்தப்பட்ட தாக்குதலையும் கட்டுப்படுத்துவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று பேஸ்புக் நிறுவனம் அறிவித்தது.

உலகின் மாபெரும் தொழில்நுட்ப நிறுவனமான ஃபேஸ்புக் கடந்த புதன்கிழமை, கனடாவின் தேர்தலில் பங்கேற்கும் வேட்பாளர்களின் சமூக வலைத்தள கணக்குகள் முறையாகப் பாதுகாக்க படுவதற்கான நடவடிக்கைகளை நடைமுறை படுத்துவதாகவும், சிறப்பாக பெண் வேட்பாளர்களுக்கு இணையதளங்களை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு புதிய பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும் கூறியது.

மக்கள் எவ்வாறு வாக்களிப்பது என்று மக்களை தவறாக வழி நடத்தும் பதிவுகளையும் ,சமூகவலைத்தள விதிகளை மீறும் இடுகைகளையும் நீக்குவதற்கான நடவடிக்கைகளை நிறுவனம் தொடங்கும்.

கனடாவின் பேஸ்புக் நிறுவனத்தின் பொதுக் கொள்கையின் தலைவர் கெவின் “அடுத்த ஐந்து வாரத்திற்குள் கட்டுப்பாட்டு நெறிமுறைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ,முயற்சிகளையும் மேற்கொள்வோம் ” என்று தெரிவித்தார்

சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த தேர்தல் குறித்த தவறான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்ப வலைத்தளம் அனுமதித்ததற்காக முகநூல் நிறுவனம் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.

சமூக வலைத்தளங்கள் மக்களை தவறான பாதையில் வழி நடத்துவதற்கு மூல காரணியாக அமைகின்றன. சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்திகள் குறைவான நம்பகத்தன்மை கொண்டவை என்று அவர் கூறினார்.

புதன்கிழமை வெளியான அறிக்கையில், புரட்சி தொடங்கியதிலிருந்து உலக அளவில் பேஸ்புக் மட்டும் இன்ஸ்டாகிராமில் இருந்தது 20 மில்லியனுக்கும் அதிகமான தவறான பதிவுகளை பேஸ்புக் நிறுவனம் அகற்றியுள்ளது.