வரலாறு காணாத அளவிற்கு எரிபொருள் மற்றும் எண்ணெய் விலைகள் – 24 நாடுகள் ஒருங்கிணைப்பு

Canada
Canada

புவி வெப்பமயமாதல் காரணமாக உலகெங்கிலும் பருவநிலை நெருக்கடி அதிகரித்து வருகிறது. அதிகப்படியான எரிபொருட்களின் உமிழ்வுகள் காரணமாக பனிக்கட்டி உருகுதல், காட்டுத்தீ மற்றும் வெள்ளம் போன்ற பேரிடர்கள் உயிரினங்களை அச்சுறுத்தி வருகிறது. அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இருபத்திநான்கு நாடுகள் ஒன்றிணைந்து உறுதியளித்துள்ளன.

இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் போன்ற நிறுவனங்களை செயல்படுத்தவும் விரிவுபடுத்தவும் அரசாங்கம் வழங்கும் மானியங்களை அடுத்த ஆண்டின் இறுதிக்குள் குறைப்பதாக 24 நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.

அமெரிக்கா உட்பட 24 நாடுகளும் தூய்மையான எரிசக்தி திட்டத்தை செயல்படுத்துவதற்கு உறுதியளித்துள்ளன.”உலகில் உள்ள அனைத்து இடங்களிலும் உமிழ்வுளை கட்டுப்படுத்த வேண்டிய அவசரகால நிலையில் நாம் இருக்கிறோம். உலகின் மிகப்பெரிய ஆற்றல் உற்பத்தியாளர்களில் கனடாவும் உள்ளது. அறிக்கையில் கனடாவின் கையெழுத்து குறிப்பிடத்தக்கது ஆகும் ” என்று இயற்கை வள அமைச்சர் ஜோனாதன் கூறினார்.

G20 நாடுகள் மற்றும் கனடா ,வெளிநாடுகளில் உள்ள நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களுக்கு மானியங்கள் வழங்குவதை நிறுத்துவதாக அறிவிப்பை வெளியிட்டன. ஆனால் கொரியா ,சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் புதைபடிவ எரிபொருள்களின் நிதி வழங்குவதற்கு மறுப்பு தெரிவிக்கும் உறுதிமொழியில் பங்கேற்கவில்லை.

மானிய நிறுத்தம் அறிவிப்பு எரிபொருள் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் எவ்வாறு இருக்கும் இனிவரும் காலங்களில் அறிந்து கொள்ள முடியும். சர்வதேச அளவில் எரிபொருள் நிறுவனங்களுக்கு நிதி உதவிகளை ஒரு மிகப்பெரிய நிறுவனமானது வழங்கிவருகிறது. கனடா மேம்பாட்டு ஏற்றுமதி மீது பெரும் தாக்கத்தை இந்த சர்வதேச நிதி உதவி ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது