டெல்லி -இந்தியாவின் Covaxin-ஐ மதிப்பாய்வு செய்ய கனடாவிற்கு நேரம் கிடைக்கவில்லையா ?

Canada Tamil News
Canada delhi

இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவிட் 19 தடுப்பூசி மருந்துகளின் அவசரகால பட்டியலை (WHO) உலக சுகாதார அமைப்பு வழங்கியுள்ளது. இருப்பினும் கனடிய அரசாங்கம் இந்தியாவின் Covaxin நிறுவனத்தின் தடுப்பு ஊசி மருந்தினை அங்கீகரிக்கவில்லை.

பைசர், அஸ்ட்ரா ஜெனகா,மாடர்னா, கோவிஷீல்டு மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் போன்ற covid-19 தடுப்பூசி மருந்துகள் கனடிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் கோவேக்சீன் இடம்பெறவில்லை.

Covid-19 தடுப்பூசி மருந்துகளை அங்கீகரிப்பதில் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு தரநிலைகள் கடைபிடிக்கப்படுகின்றன. கனடாவில் பல்வேறு நிறுவனங்களின் தடுப்பூசி மருந்துகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கோவேக்சின் தடுப்பூசி மருந்துகள் தரநிலையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட போதிலும் கனடிய அரசாங்கம் இந்தியாவின் தடுப்பூசி மருந்து தர நிலையை ஆய்வு செய்வதற்கு நேரம் ஒதுக்க தயக்கம் காட்டுகிறது.

கடந்த வாரம் இந்தியாவின் தடுப்பூசி சான்றிதழ் இங்கிலாந்து அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. உலகின் இயல்பு நிலையை மீட்டெடுப்பதற்கு தடுப்பூசி மருந்துகளை அங்கீகரிக்க வேண்டும்.

செப்டம்பர் மாதம் இருபத்தி ஏழாம் தேதி இந்தியாவில் இந்த நேரடி விமானங்களை இயக்க கனடிய அரசாங்கம் அனுமதி அளித்தது. கனடாவிற்கு செல்வதற்கு 14 நாட்களுக்கு முன்பு covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்துகளின் இரண்டாவது டோஸை பெற்றிருக்க வேண்டும் என்று கனடா தெரிவித்திருந்தது.

கனடிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள covid-19 தடுப்பூசி மருந்துகளில் ஏதேனும் ஒன்றின் இரண்டு கட்ட தடுப்பூசி அளவுகளைப் பெற்றிருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.