கனடாவில் தேர்தல் எப்போது? -வாதிடும் எதிர்க்கட்சி தலைவர்கள்

canada-watching-covid-19-surge

கனடாவில் தேர்தலை எதிர்நோக்கி அனைத்துக் கட்சித் தலைவர்களும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபடுகின்றனர். கூட்டாட்சி தேர்தலுக்காக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

கனடாவில் நாடாளுமன்றத்தை கலைத்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி தேர்தலுக்கான வாக்கெடுப்பை நடத்த ஜெனரல் மேரி சைமனை நேரில் சந்தித்து கோரிக்கையை முன்வைக்க உள்ளார் .

Covid-19 வைரஸ் தொற்றின் நான்காவது அலை கனடா முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும் முன்பு வாக்கெடுப்பை நடத்துமாறு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நாட்டின் எதிர்க்கட்சி தலைவர்கள் நாட்டில் மக்கள் அனைவரும் covid-19 வைரஸ் தொற்றினால் சுகாதாரம் மற்றும் பொருளாதார நெருக்கடியில் உள்ளபோது தேர்தலில் இறங்குவது முறையற்றது மற்றும் தேவையற்றது என்று கூறுகின்றனர்.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி தேர்தலுக்கு சென்ற இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இறுதியாக தங்களது சிறுபான்மையான அரசாங்கத்தை பெரும்பான்மையான அரசாக மாற்றுவதற்கு முயற்சிக்கிறார்கள் என்று கூறினர்.

நாட்டின் தற்போதைய நிலவரப்படி, நான்கு சுயேச்சை கட்சிகளும் ஒரு காலி இடமும் உள்ளது. லிபரல் கட்சியினர் 155 இடங்களும் , கன்சர்வேட்டிவ் 119 இடங்களும், கியூபிக்கோயிஸ் 32, என் டி பி 24 மற்றும் பசுமை கட்சியினர் இரண்டு இடங்களை கொண்டுள்ளனர்.

இதற்கிடையில் கனடாவின் பொது சுகாதார அதிகாரி தெரசா டாம் ” தேர்தலின்போது கனடிய மக்கள் covid-19 சுகாதார கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை முறையாக பின்பற்றி பாதுகாப்பான முறையில் வாக்களிக்க முடியும்” என்று தேர்தல் குறித்து தெரிவித்தார்.

என்டிபி கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங் தனது தேர்தல் பிரச்சாரத்தை மான்ட்ரியலில் தொடங்குவதாகவும், கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் எரின் பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் கியூபெக் பகுதி மக்களுடன் மெய்நிகர் வாயிலாக உரையாற்றுவார் என்றும் தகவல்கள் கூறுகின்றன