தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் கனடாவிற்குள் நுழைய இவர்களுக்கு மட்டும் அனுமதி – அமெரிக்க டிரக் ஓட்டுனர்கள் எல்லையிலிருந்து அனுப்பப்படுவார்கள்

america canada border
canada

Covid-19 வைரஸ் தொற்றினை தொடர்ந்து கவலைக்குரிய மாறுபாடு என்று கருதப்படும் ஓமிக்ரோன் வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் கனடா தனது எல்லையை தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களுக்கு மூடியுள்ளது.

கனடிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளில் ஏதேனும் ஒன்றினை முழுமையாக பெற்றிருந்தால் மட்டுமே கனடாவிற்குள் நுழைய அனுமதி வழங்கப்படும் என்று கனடிய அரசாங்கம் அறிவித்திருந்தது.

அமெரிக்காவிலிருந்து கனடாவிற்குள் நுழையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத ட்ரக் ஓட்டுநர்கள் கனடாவின் எல்லையில் அனுமதிக்கப்படுவார்கள் என்று கனடா பார்டர் சர்வீஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக சனிக்கிழமை முதல் அமெரிக்காவிலிருந்து கனடாவிற்குள் நுழையும் அனைத்து ட்ரக் ஓட்டுநர்களும் தடுப்பூசி ஆதாரத்தை காட்ட வேண்டும் என்று அறிவித்தார்.

லிபரல் அரசாங்கத்தின் இந்த அறிவிப்புக்கு எதிராக எதிர்க்கட்சிகளும் ட்ரக் உரிமையாளர் சங்கங்களும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். லிபரல் கட்சியின் இந்த அறிவிப்பால் ஓட்டுனர் பற்றாக்குறை ,பணவீக்கம் மற்றும் வர்த்தகத்தை சீர்குலைக்கும் என்று கூறுகின்றனர்.

குறைந்தபட்சம் முதல் தவணை தடுப்பூசி அல்லது தடுப்பூசி போடப்படாத கனடிய டிரக் ஓட்டுனர்களுக்கு covid-19 பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று கனடிய பார்டர் சர்வீஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது.

அமெரிக்காவிலிருந்து கனடாவிற்குள் நுழையும் அமெரிக்க டிரக் ஓட்டுனர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருந்தால் ஜனவரி 15 முதல் எல்லையில் இருந்து திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.