கனடா வரவேற்பு – அமெரிக்கர்கள் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி மருந்துகளை பெற்றிருக்க வேண்டும்

canada top 10 billionaires 2019
canada top 10 billionaires 2019

அமெரிக்கர்களை வரவேற்கும் கனடா :

Covid-19 கட்டுப்பாடுகள் கனடாவில் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. Covid-19 தொற்றுகள் அதிகரித்த நாடுகளிலிருந்து கனடாவிற்கு வரும் விமானச் சேவைகள் தடைசெய்யப்பட்டு அறிவிக்கப்பட்டிருந்தது.கனவிற்குள் நுழையும் பயணிகளுக்கு பல்வேறு பரிசோதனைகள் மற்றும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருந்தது.தற்பொழுது முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட அமெரிக்கர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் கனடாவிற்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

ஹெல்த் கனடா அமைப்பின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட covid-19 தடுப்பூசியின் முழு அளவுகளை பெற்ற அமெரிக்க குடிமக்கள் மீண்டும் கனடாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று ஞாயிற்றுக்கிழமை கூறப்பட்டது.

கனடாவிற்குள் நுழைவதற்கு தகுதி பெற பயணிகள் அமெரிக்காவில் வசிக்க வேண்டும்,இறுதிக் கட்ட தடுப்பூசி மருந்து பெற்றுக் கொண்டதிலிருந்து குறைந்தபட்சம் 14 நாட்கள் கடந்து இருக்க வேண்டும் மற்றும் covid-19 பரிசோதனை முடிவுகள் எதிர்மறையாக இருக்க வேண்டும் .

தடுப்பூசி மருந்துகள் குறித்த தகவல்களை பதிவேற்றம் செய்வதற்கு Arrivecan செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும் அல்லது இணையதளத்தில் portal வாயிலாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.

ஹெல்த் கனடா அங்கீகரித்துள்ள நான்கு தடுப்பு ஊசி மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை பெறவில்லை அல்லது 14 நாட்கள் காத்திருக்க இயலவில்லை என்பதால் முதல் வாரத்தில் பலரை திரும்ப அனுப்ப வேண்டியிருந்தது என்று கனடா பார்டர் சர்வீஸ் ஏஜென்சியின் துணைத் தலைவர் டெனிஸ் வினட் தெரிவித்தார்.

கனடா அங்கீகரித்துள்ள தடுப்பூசி மருந்துகள் :

  • பைசர் பயோடெக்
  • ஆக்ஸ்போர்டு அஸ்ட்ரா ஜெனக்கா
  • மாடர்னா
  • கோவி ஷீல்ட் போன்றவையாகும்.
  • ஜான்சன் அண்ட் ஜான்சன் (option) ஒற்றை டோஸ் விருப்பப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது