பிரிட்டிஷ் கொலம்பியாவில் 100% திறனில் செயல்பட அனுமதி – விதிமுறைகளை கடைபிடிக்க ஹென்றி அறிவுரை

bc
bc ( Evan Mitsui/CBC News)

கனடாவில் covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி விகிதங்கள் அதிகரித்து வருவதை தொடர்ந்து சில மாகாணங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு வருகின்றன. பிரிட்டிஷ் கொலம்பியாவில் இரண்டு கட்ட தடுப்பூசி மருந்துகளை பெற்றவர்களுக்கு உட்புற மற்றும் வெளிப்புற கூட்டங்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது

12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்கு இரண்டு கட்ட covid-19 தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை அக்டோபர் 25ஆம் தேதி முதல் மாகாண சுகாதார நடவடிக்கைகள் அமலுக்கு வருகிறது.

மாகாண சுகாதார அதிகாரி போனி ஹென்றி ,பிரிட்டிஷ் கொலம்பியாவில் வணிகங்கள் முழுவதும் 100% திறனில் திங்கட்கிழமை முதல் செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் தடுப்பூசி சான்றிதழை காண்பிக்கும் வழி முறை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் 12 முதல் 17 வயது குழந்தைகள் 73% சதவீதம் பேர் covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர். மேலும் 82 சதவீதத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் குறைந்தபட்சம் முதல்கட்ட தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் என்று தகவல்கள் கூறுகின்றன.

Covid-19 வைரஸ் தொற்று நிலைமை தொடர்ந்து வருவதால் மாகாணங்களில் வேறு என்ன கட்டுப்பாடுகளை நீக்கலாம் என்று அதிகாரிகள் ஆலோசனை செய்வதாக ஹென்றி கூறினார்.

Covid-19 சுகாதார விதிமுறைகளை கடைபிடிக்க மறுக்கும் உணவகங்களுக்கு தடை விதிப்பதற்கு Fraser சுகாதார ஆணையம் முயற்சி செய்கிறது. விதிமுறைகளை மீறும் உணவகங்கள் தங்கள் சமூகத்தை மதிக்கவில்லை என்பதை காட்டுகிறது என்று கூறினார்