கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த்தின் அடுத்த கட்ட நகர்வு – ராணுவ வீரர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்

Anita anand appointed as canada minister - கனடாவில் அமைச்சராகி சாதித்த தமிழ்ப் பெண் அனிதா ஆனந்த்
Anita anand appointed as canada minister - கனடாவில் அமைச்சராகி சாதித்த தமிழ்ப் பெண் அனிதா ஆனந்த்

கனடாவின் பாதுகாப்புத்துறை அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனிதா ஆனந்த் ,”கனடிய ஆயுதப் படை வீரர்கள் திறமையாக செயல்படுவதற்கும், பாதுகாப்பாக உணர்வதற்கும் ,அவர்கள் பாதுகாக்கப்படுவதை கண்காணிக்க வேண்டும். மேலும் அவர்களை மதிக்க வேண்டும்.” என்று ட்விட்டரில் கூறியுள்ளார். முந்தைய பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஷித் சர்ஜன் ,ராணுவத்தில் பாலியல் துன்புறுத்தல் நெருக்கடிகளை சமாளிக்கவில்லை .

சர்ஜனின் பதவி விலகலுக்கு பின்னர் அக்டோபர் 26-ஆம் தேதி அமைச்சரவையை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார். கனடாவின் புதிய பாதுகாப்பு துறை அமைச்சராக பதவியேற்றுள்ள அனிதா ஆனந்த் ” இந்த நெருக்கடியை சரி செய்வது எனது முன்னுரிமை ,நான் அதை செய்ய போகிறேன்! நான் உறுதியாக இருக்கிறேன் ” என்று ஞாயிற்றுக்கிழமை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் 2019ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்தார். அரசியலுக்கு வருவதற்கு முன்பு டொரன்டோ பல்கலைக்கழகத்தில் சட்டப் பேராசிரியராக பணிபுரிந்தார்.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் முந்தைய அமைச்சரவையில் தடுப்பூசி மருந்து கொள்முதல் மற்றும் பொது சேவைகள் துறையை மிகவும் சிறப்பாக கையாண்டார். பிரதமரின் அமைச்சரவையில் அனிதா ஆனந்த் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

கனடிய ஆயுதப்படையில் பாலியல் முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வெளிவந்த நிலையில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் சர்ஜன் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்காததால் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாக்கப்பட்டார். இந்த வருடம் பதவியேற்ற அனிதா ஆனந்த் குற்றச்சாட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதாக உறுதியளித்தார்.