அனிதா ஆனந்த் கனடாவின் பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவி ஏற்கிறார் – இரண்டாவது பெண்மணி என்ற சிறப்பு

anita
minister of defense

கனடாவில் covid-19 வைரஸ் தொற்றின் நான்காவது அலைக்கு மத்தியில் நடைபெற்ற தேர்தலில் மூன்றாவது முறையாக ஜஸ்டின் ட்ரூடோ வெற்றி பெற்று பிரதமராக பதவி ஏற்றார்.தேர்தலில் வெற்றி பெற்று புதிய அமைச்சரவையை நிறுவுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

பெரும்பாலான மூத்த அமைச்சர்களை புதிய பதவிகளில் நியமனம் செய்துள்ளார். ஏற்கனவே அமைச்சரவையில் இருந்த மூன்று அமைச்சர்களை நீக்கம் செய்து 9 புதுமுகங்களை பதவியில் நியமனம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கனடாவின் பொது சேவைகள் மற்றும் கொள்முதல் அமைச்சராக பணியாற்றிய அனிதா ஆனந்த் ,கனடிய தேசிய பாதுகாப்பு துறையில் பதவியேற்கவுள்ளார். பாதுகாப்புத் துறையில் தலைமைப் பதவியில் பொறுப்பேற்கும் இரண்டாவது பெண்மணி அனிதா ஆனந்த் என்ற சிறப்பினை பெறுகிறார்

கனடிய ராணுவத்தில் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக கடும் விமர்சனம் செய்யப்பட்ட ஹர்ஷித் சஜன் பாதுகாப்புத் துறை மற்றும் அமைச்சரவையிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளார்.பாரம்பரிய அமைச்சர் ஸ்டீவன் கில்பேல்ட் சுற்றுச்சூழல் அமைச்சராக நியமிக்கப்படுகிறார்.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கடந்த அமைச்சரவையில் இருந்த அமைச்சர்களை விட இருவர் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். அமைச்சரவையின் புதிய பட்டியலில் ஜஸ்டின் ட்ரூடோ உட்பட 39 அமைச்சர்கள் உள்ளனர்.

வேலைவாய்ப்பு துறை அமைச்சர் மற்றும் நீதித்துறை அமைச்சர் உட்பட 10 அமைச்சர்கள் மட்டுமே ஜஸ்டின் ட்ரூடோவின் கடைசி அமைச்சரவையில் தங்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது. வெளியுறவுத்துறை அமைச்சராக மெலனி ஜோலி நியமிக்கப்பட்டுள்ளார்.