அமெரிக்காவின் கொள்கை சிறந்தது – கனடாவின் PCR பரிசோதனையை ரத்து செய்ய கோரிக்கை

covid-vaccine
canada covid-vaccine test

கனடாவிற்குள் நுழையும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் கனடிய அரசாங்கம் படிப்படியாக தளர்வுகள் அறிவித்தாலும் covid-19 pcr மூலக்கூறு பரிசோதனையின் எதிர்மறையான முடிவுகள் விமான நிலையத்தில் சமர்ப்பிக்கும் விதிமுறை ஆனது அதிக செலவினை ஏற்படுத்துவதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.

Pcr மூலக்கூறு பரிசோதனை துல்லியமானது மற்றும் உணர் திறன் மிக்கது. 72 மணி நேரத்திற்குப் பிறகு பரிசோதனை முடிவுகள் துல்லியமான வெளியிடப்படும். ஆனால் PCR பரிசோதனை விலை உயர்ந்ததாகும்.Pcr பரிசோதனை தனி நபர் ஒருவருக்கு சுமார் $300 வரை செலவாகும்.

அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆன்டிஜன் சோதனை நடத்தப்படுகிறது. ஆன்டிஜன் பரிசோதனை 15 நிமிடங்களுக்குள் சோதனை முடிவுகளை வழங்கும். 20$ வரை சோதனைக்கு செலவாகும் .ஆனால் ஆன்டிஜனின் உணர்திறன் மற்றும் துல்லியம் குறைவாக இருக்கும்.

அமெரிக்கா தனது நில எல்லையை மீண்டும் திறக்கும் போது, முழுமையாக covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு Pcr பரிசோதனை தேவையை கனடா ரத்து செய்ய வேண்டும் என்று அமெரிக்க வல்லுநர்கள் கூறுகின்றனர்.

விலை உயர்ந்தப் Pcr பரிசோதனைக்கு பதிலாக ,விலை குறைந்த மற்றும் விரைவான ஆன்டிஜன் பரிசோதனையை எல்லையில் பரிந்துரைப்பது எல்லை கடக்கும் பயணிகளுக்கு கால நெருக்கடி ஏற்படுவதை தவிர்க்கும் என்று கூறுகின்றனர். Covid-19 பரிசோதனையில் அமெரிக்காவின் ஆன்டிஜன் பரிசோதனை கொள்கை சிறந்தது என்று மருத்துவர் மற்றும் அறிஞர் அமேஷ் கூறினார் .

PCR பரிசோதனையானது தங்கத் தரம் வாய்ந்தது ஆகும். Pcr பரிசோதனையில் வைரஸ் தொற்று உள்ளவர்கள் துல்லியமாக கண்டறிய படுவார்கள். ஆன்ட்டியின் பரிசோதனையில் உணர் திறன் குறைவு என்பதால் வைரஸ் தொற்று உள்ளவர்களும் எதிர்மறை முடிவுகளை பெறக்கூடும். எனவே கனடாவின் pcr பரிசோதனை நிச்சயமாக தேவைப்படுகிறது என்று கனடாவின் மொன்றியலில் குழந்தை தொற்றுநோய் நிபுணரான பாத்திமா தெரிவித்துள்ளார்.