ஏர் கனடா நிறுவனத்திற்கு நிகழ்ந்தது என்ன? – ஊதியமற்ற விடுப்பில் உள்ள ஊழியர்கள்

air canada
Photo: Air Canada

கனடிய அரசாங்கம் covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி மருந்துகளை தகுதியுள்ள அனைத்து கனடியர்களும் தவறாது பெற்றுக்கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தி வருகிறது. சுகாதாரப் பணியாளர்கள், பொது ஊழியர்கள் போன்ற அனைவரும் கனடிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள தடுப்பூசி மருந்துகளின் இரண்டு தவணைகளை பெற்று முழுமையான பாதுகாப்பை பெறவேண்டுமென்று மத்திய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

கூட்டாட்சியின் அறிவிப்பின்படி ,முழுமையாக covid-19 தடுப்பூசி மருந்துகளை பெற்றுக்கொள்ளாத 800க்கும் மேற்பட்ட ஊழியர்களை ஏர் கனடா நிறுவனம் அதிரடியாக இடைநீக்கம் செய்துள்ளது.

தலைமை நிர்வாகி மைக்கேல் ரூஸோ ,97 சதவீதத்திற்கும் அதிகமான ஊழியர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளதாக தெரிவித்தார். தடுப்பூசி போட்டுக் கொள்ளாத ஊழியர்களை ஊதியம் மற்ற விடுப்பில் வைத்துள்ளதாகவும் நடைபெற்ற மாநாட்டில் தெரிவித்தார்

வெஸ்ட் ஜெட் ஏர்லைன்ஸின் ஊழியர்களில் 300 க்கும் குறைவான ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்று தெரியவந்துள்ளது. ஏர் கனடா நிறுவனம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த திட்டமிடுகிறது.

ஏர் கனடாவின் முடிவுகள் நம்பிக்கையின் மிகப்பெரிய மூலாதாரம் என்று டொரன்டோ நகரில் தளம் கொண்டுள்ள Air Trav Inc.,நிறுவனத்தின் தலைவர் ராபர்ட் கூறினார். எனினும் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருளின் விலைகள் வணிக பயணத்தில் கவலைக்குரிய பகுதிகளாகும் என்று கூறினார்.