ஆப்கானிஸ்தானை காப்பாற்றுங்கள் – கனடாவில் ஒருங்கிணைந்த ஆப்கானிய மக்கள்

canada govt announces new wage subsidy covid 19
canada govt announces new wage subsidy covid 19

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தொடர்ந்து தாக்குதலை ஏற்படுத்தி ஒரு வாரத்திற்குள் நாடு முழுவதையும் கைப்பற்றினர்.ஆப்கானிஸ்தானில் சிக்கி தவிக்கும் கனடா,இந்தியா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற நாட்டு மக்கள் உடனடியாக வெளியேறுவதற்கு அந்நாடுகளில் இருந்து விமானங்கள் அனுப்பப்பட்டு வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை கனடாவில் வாழும் ஆப்கானியர்கள் மிசிசாகா பகுதியில் , ஆப்கானிஸ்தான் முழுவதையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த தாலிபான்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஒருங்கிணைந்து செயல்பட்டனர்.

“ஆப்கானிஸ்தானில் வாழும் நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்பத்திற்கு உதவுங்கள் “, “ஆப்கானிஸ்தானை காப்பாற்றுங்கள்” மற்றும் ” நாட்டு மக்கள் மீது நடத்தப்படும் வன்முறை தாக்குதலை தடுத்து நிறுத்துங்கள் ” என்று எழுதப்பட்ட பதாகைகளை “celebration square” -ல் ஏந்தியபடி நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் ஆப்கானிஸ்தானின் ஆக்கிரமிப்பை கண்டித்து சர்வதேச மக்களுக்கு அழைப்பு விடுத்தனர். ஆப்கானிஸ்தான் கொடிகளை அசைத்து நாட்டிற்கு உதவ உலக நாடுகள் முன்வர வேண்டுமென்று கோரினர்.

“ஆப்கானிஸ்தானில் மக்கள் அனுபவிக்கும் துயரங்கள் போன்றவற்றிற்கு உதவும் வகையில் ஆதரிப்பதற்காக இங்கு கூடியுள்ளோம்” என்று காதிர் ஜலிலி தெரிவித்தார். ஆப்கானிஸ்தானில் அவரது 92 வயது நிறைந்த பாட்டி உட்பட உறவினர்களும் அங்கு இருப்பதாக கூறினார்.

“நாங்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானை விட்டு வெகு தொலைவில் இருந்தாலும், அங்குள்ள எங்கள் மக்கள் அனுபவிக்கும் வேதனையையும்,துன்பங்களையும் நாங்கள் உணர்கிறோம் ” என்று தெரிவித்தனர்.

தாலிபான் அமைப்பு ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் அதிரடியாக நுழைந்ததும் ஆப்கானிஸ்தான் பிரதமர் அஷ்ரப் கானி நாட்டை விட்டு வெளியேறினார். ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு படைகளை உருவாக்க அமெரிக்கா போன்ற நாடுகள் பல பில்லியன் டாலர்கள் செலவு செய்து கிட்டத்தட்ட இருபது வருடங்களாக முயற்சி செய்தபோதிலும் தாலிபன் அமைப்பு ஒரே வாரத்திற்குள் நாடு முழுவதையும் கைப்பற்றி பிரதமர் மாளிகைக்குள் நுழைந்தது அனைவருக்கும் அதிர்ச்சி அளிப்பதாக கூறினார்.