கனடாவிற்குள் நுழையும் ஆப்கானிய மக்களுக்கு பாஸ்போர்ட் தேவையில்லை – கனடா

Canada air passengers viral video
Canada air passengers viral video
ஆப்கானிஸ்தானுக்கு ஆதரவாக கனடா

ஆப்கானிஸ்தானை தாலிபன் அமைப்பு முழுவதுமாக கைப்பற்றியதால் அங்கிருக்கும் மக்கள் பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக புலம் பெயர்ந்து வருகின்றனர். விமானங்களின் மூலம் ஆப்கானிஸ்தானில் இருக்கும் மக்களை அவரவர் நாடுகளுக்கு குடியேற்றம் செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கனடாவின் குடியேற்ற அமைச்சர் மார்க்கோ மென்டிசினோ ஆப்கானிய மக்களை குடியேற்றம் செய்யும் நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.

ஆப்கானிஸ்தானில் கனடாவின் தூதரக பணியில் வேலை செய்த மொழிபெயர்ப்பாளர்கள், பாதுகாவலர்கள், அலுவலர்கள் மற்றும் சமையல்காரர்கள் போன்ற ஊழியர்களின் குடும்பத்திற்கான,வாழ்வியல் ஆதாரங்கள் மற்றும் ஆக்கங்களை செயல்படுத்துவார் என்று கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் இருந்து கனடாவிற்குள் நுழையும் பயணிகளுக்கு பாஸ்போர்ட் மற்றும் covid-19 எதிர்மறையான முடிவு கொண்ட சான்றிதழ்கள் தேவையில்லை என்று அறிவித்தார். ஆப்கானிஸ்தானின் தலைநகரம் காபூலில் இருந்து இந்த வாரம் இரண்டு C-17 போக்குவரத்து விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய கனடா பாதுகாப்புத்துறை தெரிவித்தது.

இதுவரை கனடாவிற்கு ஆயிரம் ஆப்கானிஸ்தான் அகதிகள் வந்துள்ளதாக மென்டிசினோ தெரிவித்தார். ஆப்கானிஸ்தான் அகதிகளை வெளியேற்ற உதவுவதற்கு ஆப்கானிஸ்தானில் கனடாவின் ராணுவவீரர்கள் செயல்படுவதாக வியாழக்கிழமை அன்று தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானை தாலிபன் அமைப்பு முழுவதுமாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த பின்பு கொடூரமான வன்முறை தாக்குதல், கைது செய்யப்படும் அபாயம் உள்ளதால் கனடாவின் தூதரக பணியில் இருந்த ஊழியர்கள் அவசரமாக ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறினர்.ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் வீட்டிற்குள் புகுந்து நடத்தி வருவதாகவும் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வராமலும் உள்ளதாக கூறப்படுகிறது.