“நீங்கள் சிறுநீர் கழிக்க காவல்துறை எப்படி உதவப் போகிறது ” – 911 அவசரகால சேவை

ambulance police emergency
peel police ambulance

ஒன்ராறியோவில் மக்களின் அவசர காலத்திற்கு உதவுவதற்காக 911 சேவை வழங்கப்படுகிறது. திடீரென பொதுமக்களுக்கு உதவி தேவைப்பட்டால் 911 என்ற எண்ணிற்கு அழைப்பதன் மூலம் சேவைகள் வழங்கப்படும். 911 சேவைகளை பொதுமக்களுக்கு விளக்குவதற்காக வெள்ளிக்கிழமை அன்று பீல் பிராந்திய காவல்துறை ஆடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்ட ஒருவர் உதவிக்காக 911 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளார். தனது அவசர தேவைக்காக தொடர்பு கொண்ட நபரிடம் ஆபரேட்டர் அழைப்பை ஏற்று பேச ஆரம்பித்துள்ளார். தீயணைப்பு, ஆம்புலன்ஸ் அல்லது காவல்துறை தேவையா என்று ஆபரேட்டர் அந்த நபரிடம் கேட்கிறார்.

போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவித்த அழைப்பாளர் முதலில் ஆம்புலன்ஸ் வேண்டுமென்று கூறினார். பின்னர் போலீஸ் உதவி தேவைப்படுவதாக ஆபரேட்டரிடம் கூறினார். ஆபரேட்டர் குழப்பம் அடைந்தார்.

அழைப்பாளர் ” நான் சிறுநீர் கழிக்க வேண்டும் ,போக்குவரத்து நெரிசலில் இந்த நபர் நகரவில்லை ” என்று தனது வாகனத்திற்கு முன்பு நின்று கொண்டிருந்த நபரை குற்றம்சாட்டி ஆபரேட்டரிடம் தெரிவித்துள்ளார்.உடனே ஆப்பரேட்டர் ” இதுதான் உங்கள் அவசரமா? ,நீங்கள் சிறுநீர் கழிக்க காவல்துறை எப்படி உதவப் போகிறது? ” என்று நகைப்புடன் கேட்டுள்ளார்.

தனது அவசரத்தில் ஆபரேட்டரின் கேள்விகளை பொருட்படுத்தாத அழைப்பாளர் மீண்டும் ” நான் சிறுநீர் கழிக்க வேண்டும் ” என்று கூறுகிறார்.

” நீங்கள் சிறுநீர் கழிக்க உதவும் வகையில் நான் என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியவில்லை ,என்னால் உதவ முடியாது ” என்று கூறி ஆபரேட்டர் அழைப்பைத் துண்டித்தார் .

“911 சேவை, உங்களுக்கு முன்னால் செல்லும் வாகனத்தை வேகமாக இயக்குவதற்கும், குளியலறை பயன்பாடுகளுக்கும் கிடையாது என்று வெள்ளிக்கிழமை பீல் காவல்துறையினர் கூறினர். மேலும் 911 சேவையை தவறாக பயன்படுத்துவதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் உதவி தேவைப்படும் நபருக்கு உதவி கிடைக்காமல் போகலாம் “என்று பொதுமக்களுக்கு காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.