கனடாவில் வாழும் இந்தியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – புதிய குடியேற்ற கொள்கைகள் உருவாக்கம்

canada tamil news

கனடாவில் செப்டம்பர் 20ஆம் தேதி 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி பெற்றது. லிபரல் கட்சியின் தலைவர் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பெரும்பான்மையை எதிர்ப்பார்த்த போதிலும் சிறுபான்மை கல்வி வெற்றி பெற்றிருந்தார்.

ஜஸ்டின் ட்ரூடோ தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று தனது பதவியை தக்க வைத்துக் கொண்டு கனடிய மக்களையும் கனடாவில் குடியேறும் அயல் நாட்டு மக்களையும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளார்.

லிபரல் கட்சி எப்போதும் புலம்பெயர்ந்தோருக்கான சட்டங்கள், விதிமுறைகள் போன்றவற்றை வழிவகுத்து தொடர்ந்து ஆதரித்து வருகிறது. கனடாவில் குடியேறும் மக்களால் ஏற்படும் கலாச்சார நன்மைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சி போன்றவை நாடு முழுவதும் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டு வரும் என்று லிபரல் கட்சியினர் கூறுகிறார்கள்.

கனடாவில் குடியேறுவதில் பெரும்பான்மையான மக்கள் இந்தியர்கள் ஆவர்.கல்வி, வணிகம் மற்றும் வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவிலிருந்து கனடாவிற்கு புலம் பெயர்கின்றனர் .தற்போதைய நிலவரப்படி கனடாவில் வேகமாக வளர்ந்துவரும் சமூகங்களின் வரிசையில் இந்தோ-கனடிய சமூகமும் ஒன்றாகும் .

லிபரல் கட்சியின் 17 இந்திய – கனடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் நடைபெற்ற கூட்டாட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துள்ளனர். இது கனடாவில் வாழும் இந்தியர்களுக்கு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் உருவாக்கியுள்ளது.

லிபரல் கட்சியினர் புலம்பெயர்பவர்களின் ஒற்றுமை திட்டங்களுக்காக மின்னனு பயன்பாட்டை அறிமுகப்படுத்த உள்ளார்கள். இது கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தேடுவதற்காக கனடாவிற்குள் நுழைந்த இந்திய சமூகத்திற்கு மிகுந்த பயனளிக்கும் என்று கூறப்படுகிறதுமேலும் புதிய குடியேற்ற கொள்கைகள் மற்றும் திட்டங்களை அறிமுகப்படுத்துவதாக லிபரல் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.