உக்ரைன் -ரஷ்யா போர் – பசியில் வாடும் உலக ஏழை மக்கள்

wheat import inflation russia ukraine war canada can help scarcity

வான்வெளி தாக்குதல்கள் ,குண்டு வீசுதல் போன்ற பயங்கரவாத நடவடிக்கைகளால் உக்ரைன் முழுவதையும் ரஷ்யா ஆக்கிரமித்து வருகிறது. ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்த்து மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் விளைவாக சர்வதேச நாடுகளில் இறக்குமதி பாதிப்படைந்துள்ளது.

உலகின் ஏழைகளை கடுமையாக பாதிக்கும் வகையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைனிடமிருந்து அதிக அளவில் கோதுமையை இறக்குமதி செய்யும் வட ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இவற்றின் தாக்கம் ஏற்படும். உலகளவில் கால் பகுதி கோதுமையை இறக்குமதி செய்யும் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் காரணமாக விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

உக்ரைன் மீதான தாக்குதலுக்கு ரஷ்ய அதிபர் அனுமதி அளித்துள்ளார். இதன் விளைவாக பணவீக்கம், எரிசக்தி விலைகளின் உயர்வு மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு போன்றவை உயர்ந்து கொண்டிருக்கின்றன. விலைவாசி உயர்வு இன்னும் மோசமான நிலைக்கு மாறும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கோதுமை இறக்குமதியில் கனடாவினால் உதவ முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக கோதுமையில் 40 சதவீதம் மட்டுமே வசந்த காலத்தில் பயிரிடப்படுகிறது. ஒரு கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்ட பிறகு ஓரளவுக்கு மீண்டு வரமுடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.வெள்ளியன்று கனடிய அரசாங்கத்தால் கணிப்புகள் வெளியிடப்பட்டன.