“நரகத்திற்கு வருக ” உக்ரேனிய ஆயுதப் படைகளின் தலைமை தளபதி அறிக்கை – ரஷ்யாவுக்கு எதிராக கனடா உக்ரைனுக்கு ஆதரவு

commons debate liberal ndp conservative

உக்ரைன் எல்லைப் பகுதியில் ரஷ்யா படைவீரர்களை நிறுத்தி வைத்துள்ளதால் உக்ரைன் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.உக்ரைனுக்கு ஆதரவாக கனடிய அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. தற்பொழுது ரஷ்யாவின் உக்ரைன் மீதான படையெடுப்பு எந்த நேரத்திலும் நடக்கலாம் என்ற அச்சத்தின் காரணமாக கனடிய தூதரகம் தற்காலிக அலுவலக இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது .

உக்ரைன் தலைநகர் கீவ்- இல் உள்ள கனடிய தூதரகத்தை ரஷ்யாவின் போர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள தற்காலிக அலுவலகத்திற்கு தூதரக ஊழியர்களை கனடிய அரசாங்கம் இடமாற்றம் செய்துள்ளது.

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உக்ரைனுக்கு ஆதரவாக கனடா துணைநிற்கும் என்று உக்ரேனிய ஜனாதிபதி Volodymyr zelenskyy-க்கு உறுதியளிக்க முயற்சித்த சில மணி நேரத்திலேயே வெளியுறவு துறை அமைச்சர் மெலனி ஜோலி உக்ரைனில் உள்ள கனடிய தூதரகத்தை மூடுவதாக சனிக்கிழமை தெரிவித்தார்.

முன்னாள் சோவியத் நாடுகளை நேட்டோவில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்று ரஷ்யா மேற்கத்திய நாடுகளிடம் கோரிக்கை வைத்துள்ளது .நேட்டோ தனது எல்லைக்கு அருகில் நிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆயுதங்களை திரும்பப் பெறவும் கிழக்கு ஐரோப்பாவில் இருந்து கூட்டணி படைகளை திரும்பப் பெறவும் விரும்புகிறது.

கோரிக்கைகளை மேற்கத்திய நாடுகள் அனைத்தும் முற்றிலுமாக நிராகரித்துள்ளன. உக்ரேனிய ஆயுதப் படைகளின் தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் வலெரி மற்றும் பாதுகாப்பு மந்திரி ஒலெக்ஸி ஆகியோர் ” நாங்கள் எதிரிகளை சந்திக்க தயாராக உள்ளோம், ஆனால் மலர்களால் அல்ல ஈட்டிகள் மற்றும் விமானம ஆயுதங்களால்,நரகத்திற்கு வருக ” என்ற வீரம் நிறைந்த அறிக்கையை வெளியிட்டனர்