வீட்டிலேயே மெய்நிகர் வாயிலாக கல்வி கற்றல் என்பது வெறுக்கத்தக்கவை – மாணவர்கள் வேதனை

Alberta
School

கனடாவின் பல்வேறு மாகாணங்களில் covid-19 கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் பல்வேறு துறைகளும் covid-19 கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் இயங்கி வருகிறது. Covid-19 வைரஸ் தொற்று ஊரடங்கு காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்தது. தற்போது பல்வேறு துறைகளும் இயங்கி வருவதால் பாடசாலைகளும் குறிப்பிட்ட கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் திறப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

பாடசாலைகள் மீண்டும் திறப்பது குறித்து செய்தியாளர்கள் 3 மாணவர்களிடம் கருத்துக்களை கேட்டனர். பாடசாலைகளில் நாள் முழுவதும் முக கவசம் அணிதல் என்பது அசௌகரியமான உணர்வை ஏற்படுத்தும், செமஸ்டர் அடிப்படையில் தனி நபர் கற்றல் குறித்த நிச்சயமற்ற தன்மை மற்றும் தடுப்பூசி மருந்து போடுவதற்கான வயது வரம்பு குறைவு போன்றவை மற்றொரு covid-19 வைரஸ் தொற்றுக்கு தயாராகும் கனடிய மாணவர்களின் கவலைகள் என்று தெரிவித்தனர்.

ஊரடங்கு காரணத்தினால் பள்ளி ஆண்டு மாற்றப்பட்டது. இணைய வகுப்பில் இதுநாள் வரை மாணவர்கள் எதிர்கொண்ட அழுத்தங்கள் பற்றியும் செய்திக் குழு மாணவர்களிடம் விசாரணை செய்தது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் எட்டாம் தேதி அன்று 10 வயது சிறுவன் தனது பள்ளிக்கு முக கவசம் அணிந்து கொண்டு செல்ல வேண்டும். கட்டாய முக கவசம் என்பது கவலைக்குரியவை . அவர்கள் பேசுவதை கேட்பது என்பது கடினமாக மாறிவிடும்.மேலும் மெய்நிகர் வாயிலாக வீட்டிலிருந்தபடியே கல்வி கற்றல் என்பது முற்றிலும் வெறுக்கத்தக்கவை என்று டெகும்சே என்ற மாணவர் கூறினார் .

 

கடந்த covid-19 மூன்றாவது அலையின் போது தனது மகன் மெய்நிகர் வகுப்புக்கு திரும்பினான். மெய்நிகர் வகுப்பு மோசமான அழுத்தங்களை அவனுக்கு ஏற்படுத்தியது. தெருவில் உள்ள தனது சக நண்பர்களை கூட அவனால் சந்தித்துப் பேச முடியவில்லை என்று அந்த மாணவரின் தாயார் தெரிவித்தார். மேலும் வீட்டிலேயே கற்றலை பின்பற்றுவதற்கு தனிப்பட்ட இடத்தை ஒதுக்குவது என்பது மிகவும் சவால் நிறைந்தவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.