ஏற்றுக்கொள்ள முடியாதவை – டிரக்கர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் திட்ட

house of commons

கனடாவில் லிபரல் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட covid-19 ஆணைகளை எதிர்த்து எல்லை தாண்டிய லாரி ஓட்டுநர்கள் தலைநகர் ஒட்டாவாவில் நடத்திவரும் போராட்டம் போக்குவரத்து சிக்கல்கள் மற்றும் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. போராட்டக்காரர்களின் ஆர்ப்பாட்டங்களை கவனித்த பிரதமர் ட்ரூடோ ” இந்த போராட்ட இயக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது ” என்று கூறினார்.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இவ்வாறு கூறியதால் ,லிபரல் அரசாங்கத்தின் ஆணைகளை எதிர்த்து தலைநகர் ஒட்டாவாவில் முக்கிய பகுதிகளை சுற்றிவளைத்து எல்லை தாண்டிய வர்த்தகத்தை சீர்குலைத்த எதிர்ப்பாளர்களை உடனடியாக கைது செய்யுமாறு புதன்கிழமை கனடிய காவல்துறை அச்சுறுத்தியது.

கடந்த இரண்டு வாரங்களாக தலைநகரில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஆதரவாக வின்ட்சர் மற்றும் அமெரிக்க நகரமான டெட்ராய்ட் பகுதிக்கு இடையே உள்ள தூதுவர் பாலத்தை முற்றுகையிட்டு மக்கள் ஒன்று கூடியுள்ளனர். எதிர்ப்பாளர்களின் இந்த நடவடிக்கை நாட்டின் பொருளாதார மீட்சியை அச்சுறுத்துவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார் .

ஹவுஸ் ஆப் காமன்ஸில் உரையாற்றிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆர்ப்பாட்டக்காரர்களின் முறையற்ற செயல்களால் உற்பத்தியாளர்கள் மற்றும் வணிகங்களை பாதிக்கின்றன,எனவே இதுபோன்ற சட்ட விரோதமான ஆர்ப்பாட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும். போராட்டக்காரர்களின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்களின் முடிவுக்கு கொண்டுவர நாம் எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று கூறினார்.