கனடாவில் உக்ரேனின் தேசியக்கொடி – உக்ரைனுக்கு ஆதரவாக ஒட்டாவா குடியிருப்பாளர்க

ukraine flags sale in ottawa

உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யாவுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் பல்வேறு நாடுகளில் வசிக்கும் உக்ரேனியர்கள் உக்ரைனில் வசித்துவரும் குடும்பங்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆதரவு வழங்குமாறு குடியேறியுள்ள நாடுகளின் அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

கனடிய தலைநகர் ஒட்டாவாவில் தேசியக் கொடிகள் மற்றும் சின்னங்களை விற்கும் இரண்டு கடைகளில் ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியதிலிருந்து உக்ரேன் கொடிகள் அதிக அளவில் விற்பனையாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவின் தாக்குதலுக்குள்ளான உக்ரைனுக்கு ஆதரவாக குடியிருப்பாளர்கள் இருப்பதால் ,கொடிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது
ரஷ்யாவின் இரக்கமற்ற தாக்குதலினால் உக்ரைனில் இருந்து வெளியேறும் அகதிகளின் எண்ணிக்கை இரண்டு மில்லியனை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொடிகளை விற்பனை செய்யும் கடையிலிருந்து வெளியேறிய Doug Hunter தனது கையில் உக்ரைன் நாட்டு கொடியினை மடித்த நிலையில் வைத்திருந்தார். அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தனது வீட்டில் உள்ள கம்பத்தில் கொடியினை பறக்க விடுவதற்கு எண்ணியதாக தெரிவித்தார் .

உலகெங்கிலும் உள்ள ஜனநாயகத்தை பாதுகாக்க இது ஒரு வாய்ப்பு என்று அவர் கூறினார். உக்ரைன் மற்றும் உக்ரேனிய மக்கள் மிகுந்த ஆபத்தில் உள்ளனர். நம்மால் இயன்ற உதவியை அவர்களுக்கு செய்ய வேண்டும் என்று கூறிய Hunter குறைந்தபட்சம் உக்ரைனின் கொடியை பறக்கவிட்டு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.