இரண்டு கனடியர்கள் 600க்கும் மேற்பட்ட நாட்களாக சிறை பிடித்து வைத்த சீனா!

Beirut explosions
Canada Pm

சீனாவில் உளவு பார்த்ததாக இரண்டு கனடியர்கள் சுமார் 600க்கும் மேற்பட்ட நாட்களாக சீனா பிடித்து வைத்துள்ளது.  மேலும் அவர்கள் இருவருக்கும் எதிராக வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்நிகழ்வை அடுத்து கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் சீனாவிற்கு கனடாவில் ஒருசில பொருளாதார தடையை அறிவித்திருந்தார்.

தற்பொழுது கனடாவின் கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற குழு போன்றவற்றின் மீது சீன அரசாங்கம் தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவின் இந்த அதிரடி நடவடிக்கையானது கருத்துச் சுதந்திரத்தின் மீது ஏற்படுத்தப்படும் தாக்குதல் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் அறிவித்துள்ளார்.

மேலும் சீனாவின் சின்ஜியாங் பகுதியில் உய்குர் என அழைக்கப்படும் முஸ்லிம் இன மக்கள் பெரிய முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.

மேலும் அந்த இன மக்கள் மிக மோசமான அளவில் நடத்தப்படுவதாகவும் ஜனநாயக உரிமை மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு அந்த பகுதியில் தாராள அனுமதிகள் கிடைக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இந்த மக்களுக்கு எதிரான சீனாவின் நடவடிக்கைகளை வெளிப்படுத்திய கனடிய நாடாளுமன்ற உறுப்பினரான மைக்கேல் சோமு அவர்களுக்கு எதிராக சீன அரசு தடைகளை விதித்ததோடு மட்டுமின்றி நாடாளுமன்ற குழு குற்றச்சாட்டுகளையும் பகிரங்கமாக மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

சீனாவின் இந்த நடவடிக்கையை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ  அறிவித்தலில் வெளியிட்டுள்ளார்