டொராண்டோ மேல்நிலைப்பள்ளிகளில் அரங்கேறும் பாலியல் அத்துமீறல் – பெற்றோர்கள் அதிர்ச்சி!

Canadian work permit
Canadian work permit

கனடாவின் அனைத்து மாகாணங்களிலும் வைரஸ் தொற்றுகளை கட்டுப்படுத்துதல் மற்றும் தடுப்பூசி மருந்துகள் விநியோகித்தல் என்று முழு ஈடுபாட்டுடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கனடாவின் ஒரு சில மாகாணங்களில் பாடசாலைகள் முழுவதுமாக திறக்கப்படாமல் இருப்பினும் மேல்நிலை பாடசாலைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில் கனடாவின் டொரன்டோ மாகாணத்திலுள்ள மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் மாணவிகள் மீது பாலியல் தாக்குதல் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறான பாலியல் தாக்குதல் மாணவர்கள் மற்றும் மாணவிகள் மீது 12 பாலியல் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக பதிவாகியுள்ள வழக்குகளை பற்றிய விசாரணைகளை தற்பொழுது நடத்திவருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேல்நிலை படிப்பு பயிலும் மாணவர்கள் மற்றும் மாணவிகள் மீது நடத்தப்பட்ட பாலியல் தாக்குதல் மற்றும் உடல் ரீதியான தாக்குதல் பற்றிய தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி இருந்ததாக கூறப்படுகின்றன.

இதுவரை 12 வெவ்வேறு பாலியல் தாக்குதல்களும் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருவதாக கூறியுள்ளனர்.

மேலும் பாலியல் மற்றும் உடல் ரீதியான தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட அனைவரும் தம்மிடம் வந்து புகார் மற்றும் முறைப்பாடு அளிக்குமாறு காவல்துறையினர் கூறியுள்ளனர்.