மாணவர்கள் எந்த சூழ்நிலைக்கும் தயாராக வேண்டும் – டொரன்டோ பள்ளி வாரியம் அறிவிப்பு

Alberta
School

Covid-19 வழக்குகள் படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் கவலைக்குரிய மாறுபாடான வீரியம் மிக்க ஓமிக்ரோன் மக்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிகளில் மாணவர்களிடையே Covid-19 வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதால் சில பள்ளி வாரியங்கள் தொலைநிலை கற்றலுக்கு திரும்பியுள்ளன.

டொரன்டோ நகரத்தில் Covid-19 வழக்குகள் அதிகரித்து வருவதால் குளிர்கால விடுமுறைக்குப் பிறகு சில பள்ளிகள் மற்றும் வகுப்புகளில் தொலைநிலை கற்றல் மீண்டும் தொடங்குவதற்கான திட்டங்கள் இருப்பதால் மாணவர்கள் தயாராகுமாறு டொரன்டோ பள்ளி வாரியம் மாணவர்களின் பெற்றோர்களையும் கேட்டுக் கொள்கிறது.

பள்ளி மாணவர்கள் தொலைநிலை கற்றலுக்கு தேவையான கருவிகள் உட்பட தங்கள் தனிப்பட்ட உடமைகள் அனைத்தையும் வீட்டில் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும் என்று வாரியத்தின் இணையதளத்தில் புதன்கிழமையன்று குறிப்பிடப்பட்டுள்ளது .

கல்வி அமைச்சகம் மற்றும் டொரன்டோ பொது சுகாதார அமைச்சகத்திடம் இருந்து பள்ளிகள் மூடப்படும் என்று எந்த அறிக்கைகளும் தங்களுக்கு வரவில்லை என்றாலும் அவர்கள் எச்சரிக்கையுடன் பரிந்துரைக்கிறார்கள் என்று பள்ளி வாரியம் கூறுகிறது.

மாணவர்களின் கற்றல் நல்வாழ்வை தொடர்ந்து ஆதரிப்பதாகவும் கல்வி அமைச்சகம் எடுக்கும் எந்த ஒரு முடிவையும் திறமையாகவும் சுமுகமாகவும் செயல்படுத்துவதற்கு தயாராக இருப்பதாகவும் பள்ளி வாரியம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 20ஆம் தேதி தொடங்கி ஜனவரி 3ஆம் தேதி முடியும் இடைப்பட்ட நாட்களில் ஐந்து பரிசோதனைகளை உள்ளடக்கிய விரைவான ஆன்டிஜன் சோதனை கருவியுடன் மாணவர்கள் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள் என்று டொராண்டோ பள்ளி வாரியம் தெரிவித்துள்ளது.