வாகனத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி – ஸ்கார்பாரோ சந்திப்பு

toronto police

டொரன்டோ நகரில் உள்ள ஸ்கார்பாரோ பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு துப்பாக்கி சூடு நடந்தது. ஸ்கார்பாரோ சந்திப்பில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மற்றொருவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் மரணம் அடைந்தார்.

வெள்ளிக்கிழமை டன்போர்த் சாலை மற்றும் மிட்லண்ட் அவென்யூ பகுதியில் ஓரமாக உள்ள மின்கம்பத்தில் வாகனம் மோதியதாக காவல்துறைக்கு அழைப்பு வந்தது. இரவு 11:26 மணி அளவில் டொரன்டோ காவல்துறையினர் கூறுகின்றனர்.

மின் கம்பம் மீது வாகனம் மோதியதில் காயமடைந்த இரண்டு நபர்களை கண்டுபிடிக்க சம்பவம் நடந்த இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்றனர். காயமடைந்தவர்களில் ஒருவருக்கு அதிக அளவு துப்பாக்கி சூட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளது .மற்றொருவருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவம் நடந்த இடத்திற்கு மருத்துவர்கள் விரைந்து சென்றனர். சிறிய காயங்களுடன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றொருவர் அதிக காயங்களுடன் ஆபத்தான ஆபத்தான மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.உடல்நிலை மிகவும் மோசமானதால் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

சந்தேகத்திற்குரிய நபர்கள் வாகனத்தின் மீது துப்பாக்கி சூடு நடத்திய பகுதியிலிருந்து தப்பிச் சென்றதாக விசாரணையாளர்கள் தெரிவித்தனர். சந்தேகத்திற்குரிய நபர்கள் குறித்து தகவல்கள் யாரேனும் தெரிந்திருந்தால் காவல்துறைக்கு தெரிவிக்கவும் என்று கூறப்பட்டுள்ளது.

வன்முறை தாக்குதல் நடந்த பகுதியில் உள்ள மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். காவல்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது. தாக்குதலுக்கான காரணம், சாட்சி போன்றவைகளை சேகரிக்கும் பணி தீவிரம் ஆக்கப்பட்டுள்ளது