டொராண்டோ காவல்துறை தலைவர் திடீர் பதவி விலகல்! முதல் கறுப்பினத்தவர் என்ற பெருமைக்குரியவர்!

டொராண்டோ காவல்துறைத் தலைவர் மார்க் சாண்டர்ஸ், தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்.

டொராண்டோ காவல் தலைமையகத்தில் திங்கட்கிழமை பிற்பகல் நடைபெற்ற செய்தி மாநாட்டில் சாண்டர்ஸ் இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.

சாண்டர்ஸின் பணிக்கால ஒப்பந்தம் முடிய இன்னமும் 8 மாதங்கள் உள்ள நிலையில், வரும் ஜூலை 31 ஆம் தேதியுடன் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், காவல்துறை தலைவராக பதவி வகித்த சாண்டர்ஸ், டொராண்டோ காவல் சேவையின் பல பிரிவுகளில் பணியாற்றியுள்ளார்.

இதில் கொலை, தொழில்முறை தரநிலைகள் மற்றும் அவசர பணிக்குழு ஆகியவை அடங்கும்.