Covid-19 தடுப்பூசி போடப்படாத காவல்துறையினர் – ஊதியமற்ற விடுப்பிலுள்ள ஊழியர்கள்

vaccine passport poll

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் covid-19 வழக்குகளின் எண்ணிக்கை படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது.எனவே, மாகாண அரசாங்கம் பொது சுகாதார கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்கியுள்ளது. இருப்பினும் covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்துகளை முழுமையாக பெற்றிருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

ஒன்டாரியோ காவல்துறையினர் கட்டாய Covid-19 தடுப்பூசி கொள்கைகளை பின்பற்றாத காவல்துறையினர் பணியில் இருந்து நீக்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் உடற்பயிற்சி கூடங்கள், உணவகங்கள் மற்றும் திரையரங்குகள் போன்றவற்றில் covid-19 தடுப்பூசி சான்றிதழ் அவசியமில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது .

ஒன்டாரியோ மாகாணத்தின் சுகாதார தலைமை அதிகாரி சுகாதாரம் மற்றும் கல்விக்கான மாகாண ரீதியாக அறிவிக்கப்பட்ட பணியிட தடுப்பூசி ஆணைகளை நீக்குவதற்கு விரும்புவதாக கூறியுள்ளார். டொரன்டோ மற்றும் ஒட்டாவா போன்ற பெரிய போலீஸ் படைகள் தங்கள் உறுப்பினர்களுக்கு தடுப்பூசிகள் போட வேண்டியிருந்தது.

சுமார் 200க்கும் மேற்பட்ட டொரன்டோ காவல்துறை உறுப்பினர்கள் covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுத்தனர் அல்லது தடுப்பூசி நிலையை வெளியிட மறுத்தனர் என்பதால் நவம்பர் மாதம் முதல் காலவரையற்ற ஊதியமற்ற விடுப்பில் வைக்கப்பட்டனர் .

ஒட்டாவா காவல்துறையினர் பத்துக்கும் குறைவான தடுப்பூசி போடப்படாத காவல்துறை அதிகாரிகளையும் பத்துக்கும் குறைவான தடுப்பூசி போடப்படாத சிவில் பணியாளர்களையும் ஊதியமற்ற விடுப்பில் வைத்ததாகவும் தெரிவித்துள்ளது