கடும் தீ மற்றும் புகையை எதிர்கொண்டனர் – ஜன்னலை உடைத்து மீட்கப்பட்ட 2 நபர்கள்

fire crew

கனடாவில் சனிக்கிழமை மாலை செயின்ட் லாரன்ஸ் மார்க்கெட் அருகே உள்ள கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.கட்டிடத்திலிருந்து தீ விபத்து அலாரம் ஒலித்ததை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு இருவரை மீட்டனர்.

சனிக்கிழமை இரவு 8 மணிக்கு முன்னதாக லோயர் ஜார்விஸ் தெரு மற்றும் எஸ்பிளனேட் அருகிலுள்ள ஐந்து அடுக்கு மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக அவசர குழுவினர் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டனர். திடீரென்று கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் மோசமான புகை மற்றும் கடும் தீயை எதிர் கொண்டதாக கூறுகின்றனர்.

தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்கு தீயணைப்பு குழுவினர் விரைந்து செல்வதற்கு முன்னதாக கட்டிடத்தின் 3வது மாடியில் இருந்த ஒரு யூனிட் முழுவதுமாக எரிந்து சாம்பலாகியது என்று பிளாட்டூன் தலைவர் பில் பைக்ரேவ் கூறினார்.

கட்டிடம் முழுவதுமாக இரைச்சலாக இருந்தது. தீயினை கட்டுப்படுத்த மீட்புக்குழுவினர் இடிபாடுகள் வழியே செல்வதற்கு விரிவாக பணியாற்றியதாகவும் பில் கூறினார். கதவுகளுக்குப் பின் இருந்த அனைத்து பொருட்களாலும் மீட்புக் குழுவினர் உள்ளே நுழைவதில் சிரமம் ஏற்பட்டது .இருப்பினும் விபத்திலிருந்து இரண்டு நபர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டதாக கூறினார்

தீ விபத்திலிருந்து விடுபட்டு செல்வதற்கான ஒரே வழி கண்ணாடி ஜன்னலை உடைப்பது தான். எனவே, ஜன்னல்களை உடைத்தனர். டொரன்டோ தீயணைப்பு வாகனம் வாளியுடன் மேலே சென்று இரண்டு நபர்களை காப்பாற்ற முடிந்தது என்று கூறினார். கடும் புகையை சுவாசிக்க நேர்ந்ததால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்