கனடா தேர்தல் – கடும் விமர்சனங்களை எதிர்கொள்ளும் கனடா பிரதமர்

trudeau
Generations of Asian Canadians helped build Canada

கனடிய மக்கள் இன்று நடைபெறும் தேர்தலில் தனக்கு விருப்பமான கட்சிகளுக்கு வாக்களித்து வருகின்றனர். Covid-19 வைரஸ் பெருந்தொற்று காலத்தில் கனடாவில் நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. திங்கள் கிழமை ஆரம்பமாகியுள்ள தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவரான எரின் ஓ டூலை எதிர்த்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடும் விவாதங்களை எதிர் கொள்கிறார்.

Covid-19 வைரஸ் பெருந்தொற்று காலத்தில் தேர்தலை ஆதரித்ததற்காக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகினார்.வைரஸ் தொற்று பரவலின் போது பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான இடங்களை பிடிப்பதற்கு தேர்தலை உடனடியாக அழைத்தார் என்று கூறப்படுகிறது. தனது பதவி மற்றும் அதிகாரங்களை தக்க வைத்துக் கொள்வதற்காக வைரஸ் தொற்று காலத்தில் தேர்தலை அழைத்ததாக பல்வேறு விமர்சனங்கள் கூறப்படுகின்றன.

லிபரல் கட்சியின் தலைவர் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது ஆறு ஆண்டுகால ஆட்சிக்கு பிறகு பதவியை கன்சர்வேட்டிவ் கட்சியிடம் அதிகாரத்தை இழக்க நேரிடும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Covid-19 வைரஸ் தொற்றினால் பல்வேறு பாதிப்புகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வரும் நிலையில் அவசரமாக கனடாவில் தேர்தலை நடத்துவதை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நியாயப்படுத்த முயற்சிப்பதை எதிர்க்கட்சித் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Covid-19 வைரஸ் தொற்று நெருக்கடியை மற்ற நாடுகளை விட சிறப்பாக கட்டுப்படுத்தியதற்கு ஜஸ்டின் ட்ரூடோவிற்கு கனடியர்கள் சிறந்த வெகுமதி அளிப்பார்கள் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பந்தயம் கட்டியுள்ளார்.

Covid-19 ஊரடங்கு காலத்தில் கனடாவின் பொருளாதாரத்தை பராமரிப்பதற்கு ட்ரூடோ அரசாங்கம் பில்லியன் கணக்கான டாலர்களை செலவிட்டது குறிப்பிடத்தக்கதாகும். எதுவாயினும் பெரும்பான்மையான மக்களின் ஆதரவு எந்தக் கட்சிக்கு என்பது தேர்தல் முடிவுகளின் போது அறிந்து கொள்ள முடியும்.