பிரதமர் மீது சரமாரியாக குற்றம்சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர்கள் – TVA விவாதம்

steven liberal
liberal party

கனடாவில் தேர்தலை எதிர்நோக்கி நான்கு கட்சித் தலைவர்கள் மற்றும் மக்கள் எதிர்பார்ப்புகளோடு காத்திருக்கின்றனர் . வியாழக்கிழமை நடைபெற்ற தொலைக்காட்சி தேர்தல் விவாதத்தில் நான்கு கட்சித் தலைவர்களும் covid-19 வைரஸ் தொற்று நோய் மற்றும் சுகாதார பாதுகாப்பு பற்றிய விவாதத்தை முன்னும் பின்னுமாக தொடங்கினர்.

பிரெஞ்சு மொழி விவாதம் கியூபெக்கில் அதிகம் பார்க்கப்பட்ட நெட்வொர்க்குகளில் ஒன்றான TVA -வில் இடைஇடையே விவாதம் வருகிறது. மேலும் செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி முடிவு வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தேவை இல்லாமல் தேர்தலை கட்டவிழ்த்து covid-19 வைரஸ் தொற்று வழக்குகள் அதிகரிப்பதற்கு வழிவகுப்பதாகவும் எனவும் ஆப்கானிஸ்தானில் நெருக்கடி நிலைமை இருப்பதாகவும் சுட்டிக்காட்டி மூன்று எதிர்க்கட்சித் தலைவர்களும் குற்றம்சாட்டினர்.

TVA -ன் நேருக்கு நேர் விவாதத்தில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் எதிர்க்கட்சித் தலைவர் எரின் கேள்வி எழுப்பினார். நாட்டில் நான்காவது அலையின் தீவிரத்திற்கு மத்தியில் தேர்தலை கட்டவிழ்த்தது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

NDP கட்சியின் தலைவர் ஜக்மீட் சிங், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடாவில் உள்ள பல்வேறு பெரிய நிறுவனங்களுக்கும் மற்றும் பணக்காரர்களுக்கும் போதுமான வரி விதிக்க தவறிவிட்டார் என்று முக்கிய புள்ளியை சுட்டிக்காட்டி அதிரடியான விவாதத்தில் ஈடுபட்டார்.

நாளைய கனடா, சமூக கொள்கை மற்றும் covid-19 தொற்றுநோய் ஆகிய மூன்று முக்கிய கோட்பாடுகளை உள்ளடக்கி விவாதம் நடைபெற்றது. அதிகாரப்பூர்வ விவாதங்கள் அடுத்த வாரம் நடைபெற உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆங்கில மொழி விவாதம் செப்டம்பர் மாதம் 9-ம் தேதியிலும் ,பிரெஞ்சு மொழி விவாதம் செப்டம்பர் எட்டாம் தேதியிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.