கனடா, அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு பயணிக்கும் விமானங்கள் : வந்தே பாரத் மிஷனின் மூன்றாம் கட்டம் ஆரம்பமானது!

ஜூன் 11 முதல் ஜூன் 30 வரை வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் கீழ் அமெரிக்கா மற்றும் கனடாவில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை வெளியேற்ற இந்திய விமான நிறுவனமான ஏர் இந்தியா 70 விமானங்களை இயக்கும் என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் கூறியிருந்தார்.

கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை இந்தியாவிற்கு அழைத்து வருவதற்காக இந்திய அரசாங்கத்தால் மே 7 ஆம் தேதி வந்தே பாரத் மிஷன் திட்டத்தை தொடங்கியது.

இந்த பயணத்தின் மூன்றாம் கட்டத்தின் போது ஜூன் 10 முதல் ஜூலை 1 வரை ஐரோப்பா, ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு ஏர் இந்தியா வந்தே 300 விமானங்களை இயக்கவுள்ளது.

அந்த வகையில் கனடா மற்றும் அமெரிக்கா நாடுகளில் இருந்து இந்தியா திரும்ப விரும்பும் பயணிகளுக்கான வழிகாட்டுதலை தற்போது ஏர் இந்தியா வெளியிட்டுள்ளது.