கனடாவில் covid-19 நான்காவது அலை எச்சரிக்கை! – தெரசா டாம் அழைப்பு

Theresa Tam
Wear mask is safest — Canada’s top doctor advises

கனடாவில் covid-19 கட்டுப்பாட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மேலும் covid-19 தடுப்பூசி மாகாணம் முழுவதிலும் உள்ள மக்களுக்கு விரைவாக விநியோகிக்கப்பட்டு வருகின்றது. கனடாவில் போதுமான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவதற்கு முன்பு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் , மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வரும் டெல்டா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கனடா covid-19 நான்காவது அலையை சந்திக்க நேரிடும் என்று கனடாவின் மத்திய அரசாங்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அல்பேட்டா போன்ற மாகாணங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. கோடைகாலத்தின் இறுதியில் ஊரடங்கு முழுவதுமாக நீக்கப்படுவது covid-19 வைரஸ் மீண்டும் தீவிரமாக பரவுவதற்கு வழிவகுக்கும் என்று கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி கூறினார்.

மருத்துவர் தெரசா டாம் இளைய வயது உடையவர்களை விரைவில் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். நோய் பரவல் அதிக விகிதங்கள் உடன் இருப்பதால் தடுப்பூசி போட்டுக்கொள்வது சிறந்தது என்று அறிவுறுத்தியுள்ளார்.

தடுப்பூசி விநியோகங்கள் அதிகரிக்க படுவதால் covid-19 வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் covid-19 இரண்டாவது கட்ட தடுப்பூசி பெறவில்லை. சுமார் 6 மில்லியன் மக்கள் முதல் கட்ட தடுப்பூசி மருந்தினை பெற்றுக் கொள்ளவில்லை என்று ஒட்டாவாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

கனடாவில் 18 வயதிலிருந்து 29 வயதுடையவர்கள் வரையுள்ள கனடியர்கள் 46 சதவீதம் மட்டுமே இரண்டு கட்ட தடுப்பூசிகளையும் பெற்று முழுமையாக பாதுகாப்புடன் உள்ளனர். அதிக பாதுகாப்பை ஏற்படுத்த நாடு முழுவதிலும் உள்ள மக்களில் 80 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி போட வேண்டும் என்று மருத்துவர் டேம் கூறினார்.