“கனடாவிற்கு நன்றி தெரிவிக்கிறோம் , கனடியர்கள் நட்புடன் பழகுகிறார்கள் ” – ஆப்கானிய அகதிகள்

thanksgiving canada afghanistan
afghanistan justin trudeau

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள கனடிய தூதரகத்தில் 2008ஆம் ஆண்டு பணிபுரிந்த உபைதுல்லா ரஹீமை நேரில் சந்தித்தார். நன்றி தெரிவிக்கும் வாரத்தின் இறுதியில் சனிக்கிழமை அன்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆப்கானிஸ்தானில் இருந்து கனடாவிற்கு புதிதாக குடியேறிய அகதிகளை சந்தித்தார்.

ஆப்கானிஸ்தான் முழுவதுமாக தாலிபன் அமைப்பினால் கைப்பற்றப்பட்டதால் மக்கள் பலரும் நாட்டிலிருந்து பிற நாடுகளுக்கு புலம்பெயர்ந்தனர். கனடிய அரசாங்கம் 40,000 ஆப்கானிய மக்களை கனடாவிற்கு மீள்குடியேற்றம் செய்வதாக உறுதி அளித்துள்ளது.

தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் முழுவதுமாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததிலிருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகள் கனடாவிற்கு வந்துள்ளனர்.
கனடிய தூதரகத்தில் பணிபுரிந்த ரஹீம் அவரது மனைவி மற்றும் மூன்று வயது மகள் கனடாவிற்கு வந்துள்ளனர். இந்த ஆண்டு தாலிபான்களிடம் ஆப்கானிஸ்தான் வீழ்ச்சி அடைந்ததால் தற்பொழுது ஒன்றரை மாத குழந்தையுடன் ரஹீம் குடும்பத்தினர் வந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

கனடியர்கள் நட்புடன் நன்கு பழகுவதாகவும் கனடிய தூதரகத்தில் பணிபுரிய விரும்புவதாகவும் ரஹீம் கூறினார். மேலும் ” நீங்கள் செய்த எல்லா உதவிகளுக்கும் நன்றி, நாங்கள் இங்கே இருப்பதற்கு நன்றி ” என்று பிரதமரிடம் நன்றி தெரிவித்தார். பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ” நன்றி சொல்வதில் தான் நாம் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் என்பதைப் பிரதிபலிக்கிறது ” என்று கூறினார்.

ஒன்றரை மாதங்களுக்கு முன்பு கனடாவின் தற்காலிக விடுதியில் 13 பேர் கொண்ட குடும்பம் குடிபெயர்ந்தது என்று அசாத்துல்லா கூறினார் .கடந்த வெள்ளிக்கிழமை நிரந்தர வீட்டிற்கு மாறியதாக கூறினார். ” கனடிய அரசாங்கம் எங்களுக்கு கடினமான நேரத்தில் உதவி செய்தது ,கனடிய அரசாங்கத்தை நாங்கள் நன்றி தெரிவித்து பாராட்டுகிறோம் ” என்று கூறினார்