கனடாவின் வரலாற்றில் நான்காவது சம்பவம் – விலையுயர்ந்த பாதிப்பை ஏற்படுத்திய இயற்கை பேரழிவு!

rain
கல்கரியில் ஆலங்கட்டி மழையால் ஏற்பட்ட சேதம்

கனடாவில் கல்கரி பகுதியை தாக்கிய ஆலங்கட்டி மழையால் 1.2 பில்லியன் டாலர் மதிப்பிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளது.

கனடாவின் வரலாற்றில் நான்காவது மிகப்பெரிய பாதிப்பாகும். இதன் மதிப்பீடு 1.2 பில்லியன் டாலர் என்று கனடாவின் காப்பீட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் ஜூன் 13 ஆம் தேதி  ஆலங்கட்டி மழையோடு சேர்ந்த புயல், வடகிழக்கு கல்கரி, ஏர்டிரி மற்றும் ராக்கி வியூ கவுண்டியை கடுமையாக தாக்கி சேதத்தை உண்டாக்கியது.

இதனால் சுமார் 70,000 வீடுகள் பாதிக்கப்பட்டதோடு, வாகனங்களும் சேதமடைந்தன. விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களையும் அழித்தது.

ஆலங்கட்டி மழைத்துளி ஒவ்வொன்றும் டென்னிஸ் பந்துகளின் அளவுக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது. மணிக்கு 80 முதல் 100 கிமீ வேகத்தில் கீழே விழும் போது சேதம் இன்னும் கடுமையானது.

இதுவரையில் ஏற்பட்ட சேதம் 1.2 பில்லியன் டாலர் என்று மதிப்பிடப்பட்ட நிலையில், இனிவரும்  மாதங்களில் மொத்த செலவுகள் இன்னும் அதிகமாகும்.

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/

Twitter : https://twitter.com/canadatms