ஸ்கேட்டிங், உடற்பயிற்சி மையம் போன்றவற்றிற்கு முன்பதிவுகள் தேவை இல்லை – டொரன்டோ நகர்

cn tower toronto

கனடாவின் டொரண்டோவில் குளிர்காலத்தின் போது நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி மையங்கள் போன்ற நகரத்தால் நடத்தப்படும் பல்வேறு பொழுதுபோக்கு வசதிகளை பயன்படுத்துவதற்கு முன்பதிவு செய்திருக்க வேண்டும். ஆன்லைன் மூலமாக டொரன்டோ நகர மக்கள் முன்பதிவு செய்து வந்தனர் .

எதிர்வரும் நவம்பர் 29 ஆம் தேதி முதல் ,டொரன்டோ நகரத்தால் நடத்தப்படும் உட்புற விளையாட்டு அரங்கங்கள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி கூடங்கள் போன்ற பொழுதுபோக்கு வசதிகளுக்கு முற்பதிவுகள் இனி வழங்கப்படாது என்று வியாழக்கிழமை நகரம் தெரிவித்துள்ளது.

லேன் நீச்சல் மற்றும் அக்வாஃபிட் போன்றவற்றிற்கு கூடுதல் walk-in சேர்க்கப்படும். மேலும் தொடர்ந்து முன்பதிவுகள் வழங்கப்படும் .மாகாண அரசாங்கம் பல்வேறு கட்டுப்பாடுகளை நீக்கியதற்கு ஏற்ப முன்பதிவு செயல்முறை இனி தேவைப்படாது என்று செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

டக் போர்ட் அரசாங்கம் கடந்த மாதம் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ள பெரும்பாலான இடங்களில் திறன் கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்படும் என்று அறிவித்திருந்தது.

டொரன்டோ நகரில் 2.1 மில்லியனுக்கும் மேற்பட்ட முன்பதிவுகள் உடற்பயிற்சி மையம், ஸ்கேட்டிங் மற்றும் நீச்சல் போன்றவற்றுக்காக முற்பதிவுகள் நடைமுறைக்கு வந்ததிலிருந்து ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்பதிவு செயல்முறை நீக்கப்பட்டதிலிருந்து உடற்பயிற்சி மையம் ,நீச்சல் குளங்கள் போன்றவற்றிற்கு தடுப்பூசி சான்றிதழ்கள் கட்டாயமாக்கப்படும் என்று நகரம் தெரிவித்துள்ளது. ஸ்கேட்டிங் வளையங்களில் திறன் கட்டுப்பாடுகள் அதிகரிக்க படுவது டொரன்டோ மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் என்று தொற்றுநோய் நிபுணர் ஐசக் தெரிவித்துள்ளார்