விமானத்தில் இருந்து கழண்டு விழுந்த சக்கரம் – கனடாவில் உயிர்த் தப்பிய 49 பயணிகள் (வீடியோ)

விமானப் பயணம் என்பது பழகிப் போனவர்களுக்கு சர்வ சாதாரணம். ஆனால், புதிய நபர்களுக்கு அடி வயிற்றை அபாரமாக கலக்கும் பயணமாகும். பூமியில் நமது கால்கள் இல்லையென்றாலே, பீதி நம்மை தொற்றிக் கொள்ளும்.

அதுவும், புதிதாக விமானப் பயணம் மேற்கொள்ளும் நபர்களுக்கு இப்படி ஒரு அனுபவம் கிடைத்தால்….

அடுத்த அடி எடுத்து வைத்தால் அடுத்த நாடு – வியக்க வைக்கும் புகைப்படங்கள்

அப்படியொரு நிகழ்வு தற்போது அரங்கேறியுள்ளது.

மாண்ட்ரீல்-பியர் எலியட் ட்ரூடோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் கனடா விமானம், பாகோட்வில்லேவுக்கு சென்றுகொண்டிருந்தது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஒரு சக்கரம் கீழே விழுந்தது. இதனை கவனித்த விமானி, உடனடியாக விமான நிலையத்துக்கு திரும்பினார். பயணிகள் பத்திரமாக இறக்கப்பட்டனர்.

விமானத்தில் இருந்த 49 பயணிகளில் ஒருவர், விமானத்தின் இடது பக்கத்தில் தரையிறங்கும் கியர் சக்கரம் கீழே விழுந்ததை வீடியோ எடுத்துள்ளார். அவர், சமூக வலைதளங்களில் இதனை வெளியிட்டுள்ளார்.

https://youtu.be/g56_N1Q3YEs

தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது

கனடாவில் பறந்த முதல் வணிக மின் விமானம் – உலகளவில் இதுவே முதல்முறை