Covid-19 நான்காவது அலை – நேரடி கற்றலுக்காக பாடசாலைகளுக்கு திரும்பும் மாணவர்கள்

school bus
Rows of school buses are parked at their terminal, Friday, July 10, 2020, in Zelienople, Pa. (AP Photo/Keith Srakocic)

டொரன்டோ மாவட்ட பள்ளி வாரியத்தின் தலைவர் ஒன்டாரியோவின் மாகாண அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ளார். அதாவது தகுதியுள்ள மாணவர்களுக்கு covid-19 தடுப்பூசி மருந்துகளை கட்டாய தடுப்பூசிகளின் வரிசையில் சேர்க்குமாறு கேட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை TDSB பள்ளி வாரியத்தின் இணையதளத்திற்கு அனுப்பிய கடிதத்தில், Covid-19 தடுப்பூசி மருந்துகளை கட்டாயம் ஆக்குவதன் மூலம்,பாடசாலைகளில் பணி புரியும் ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மட்டுமின்றி அவர்களது குடும்பங்களையும் covid-19 வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்க வழிவகுக்கும். மேலும் நாட்டில் நான்காவது அலைக்கு மத்தியில் பள்ளிகள் இயங்குவதற்கு அனுமதிக்கும் சூழல் ஏற்படும் என்று அலெக்சாண்டர் ப்ரவுன் கூறினார்.

நாட்டிலுள்ள மக்களுக்கு நகரத்தின் மருத்துவ வல்லுனர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் covid-19 வைரஸ் தொற்றின் அபாயத்தையும், covid-19 தடுப்பூசி மருந்துகள் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள சிறந்த கவசமாக அமையும் என்று அறிவுறுத்துகின்றனர்

. Covid-19 தடுப்பூசி மருந்துகள் வைரஸ் தொற்றின் தாக்கத்தின் அபாயத்திலிருந்து பாதுகாத்து ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது என்பது உட்பட வைரஸ் தொற்று குறித்த கவலையின் மாறுபாடுகளையும் குறிப்பிட்டு அலெக்சாண்டர் எழுதினார்.

புதிய கல்வி ஆண்டு விரைவாக நெருங்குவதால் பள்ளி வாரியத்தின் கோரிக்கையை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறோம் ;மேலும் எங்களது பெரும்பாலான மாணவர்கள் நேரடி கற்றலுக்காக பாடசாலைகளுக்கு திரும்புகிறார்கள் என்றும் பிரவுன் குறிப்பிட்டுள்ளார்.

சென்ற வாரம், TDSB ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு Covid-19 தடுப்பூசி மருந்துகளை கட்டாயம் ஆக்குவதற்கு ஆதரவாக பலரும் வாக்களித்திருந்தனர். 12 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் அங்கீகரிக்கப்பட்ட Covid-19 தடுப்பூசி மருந்துகளை போட்டுக் கொள்வதற்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.