ரஷ்ய மொழி பேசும் சமூகத்தினரால் உக்ரேனிய குழு தாக்கப்பட்டதாக புகார் – கனடாவில் நடந்த போர்

canada travel restriction to canadians not go to russia and ukraine

ரஷ்யா – உக்ரேன் இடையே நடைபெற்றுவரும் போரின் விளைவாக சர்வதேச நாடுகளின் பொருளாதாரம் மற்றும் அமைதி சீர்குலைந்துள்ளது. ரஷ்யாவின் கொடூரமான நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா உட்பட கனடா போன்ற நாடுகள் கண்டனம் தெரிவித்தது மட்டுமின்றி ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதாரத் தடைகளையும் அறிவித்துள்ளன.

கனடாவிலுள்ள உக்ரேனிய மற்றும் ரஷ்ய ஆதரவாளர்களுக்கு இடையே தகராறு நடந்ததாக Edmonton காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் குறித்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கடந்த புதன்கிழமை Edmonton oilers அணி வெற்றி பெற்ற பின்னர் ,Rogers Plays அரங்கை விட்டு மக்கள் வெளியேறும்போது Washington Capitals அணியின் கேப்டன் அலெக்ஸ் கடந்த காலத்தில் ரஷ்ய அதிபர் Vladimir Putin-க்கு குரல் கொடுத்தவர் மற்றும் அவர் பதக்கத்தை தொடும் போதெல்லாம் Putin-க்கு ஆதரவாக கூச்சலிட்டார் என்பது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

அரங்கை விட்டு வெளியேறும்போது மக்களிடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு காவல்துறையினரால் தணிக்கப்பட்டதாகவும் மேலும் அந்த நேரத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் காவல்துறையினர் மின்னஞ்சலில் தெரிவித்துள்ளனர்.

அரங்கிற்கு வெளியே ரஷ்ய மொழி பேசும் ஒரு சமூகத்தினரால் தாக்கப்பட்டதாக ஆல்பர்ட்டாவில் உள்ள உக்ரேனிய கனடிய செய்தி வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டது. Edmonton மேயர் தாக்குதல் குற்றச்சாட்டு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.