உக்ரைனை பாதுகாக்க வெளிநாட்டவர்களுக்கு அழைப்பு விடுத்த பிரதமர் – ரஷ்யாவின் நிலை என்ன?

russia ukraine war

உக்ரேன் மீது கொடூரமான தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா ராக்கெட்டில் இருந்த இங்கிலாந்து மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளின் கொடிகளை நீக்கியுள்ளது. ஆனால் இந்தியாவின் கொடியை மட்டும் நீக்கவில்லை. கனடா மற்றும் அமெரிக்கா தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.இந்நிலையில் ரஷ்யாவை எதிர்த்து போராடுவதற்கு உக்ரைன் திட்டமிட்டுள்ளது.

ரஷ்யாவின் போரைத் தொடங்கிய சில நாட்களுக்கு பின்னர், ரஷ்யாவிற்கு எதிராக போரில் கலந்து கொள்வதற்கு வெளிநாட்டினரை கலந்து கொள்ளுமாறு உக்ரேனிய அதிபர் Volodymyr Zelenskyy அவசர வேண்டுகோளை விடுத்தார்.”

உக்ரைனின் பிராந்திய பாதுகாப்புக்கான சர்வதேச படையின் ஒரு பகுதியாக உக்ரைன் மற்றும் உலக ஒழுங்கை பாதுகாக்க விரும்பும் வெளிநாட்டினர் ,உக்ரேனின் தூதரக பணிகளை அந்தந்த நாடுகளில் தொடர்பு கொள்வதற்கு உங்களை அழைக்கிறேன் ” என்று கூறினார்.

ரஷ்யாவின் படையெடுப்பிற்கு பயந்து உக்ரைன் எல்லையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் நாட்டைவிட்டு வெளியேறும்போது தன்னார்வலராக உலகம் முழுவதிலும் உள்ள பெரும்பாலும் ஆண்கள் ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்த்துப் போராடுவதற்கும் ,உக்ரேன் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுப்பதற்கும் வருகிறார்கள்.

உக்ரேன் அதிபரின் அழைப்பிற்கு கனடாவின் டொரன்டோ நகரை சேர்ந்த நபர் நேர்காணலில் பதிலளித்துள்ளார். உக்ரைனில் உள்ள நண்பர்கள் மற்றும் குடும்பங்களை பாதுகாக்க முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார். கனடாவில் உக்ரேனியர்கள் அதிக அளவில் உள்ளனர். உக்ரேனின் ஆபத்தான நிலையில் உறுதுணையாக நிற்க தயங்கமாட்டோம் என்று அவர் தெரிவித்தார்