குற்றங்களுக்கு மன்னிப்பு கேட்ட சட்டமன்றத்தின் சுயச்சை உறுப்பினர் – ஒண்டாரியோ மாகாணம்

கனடாவில் தினசரி பதிவாகும் covid-19 வைரஸ் தொற்று வழக்குகள் கணக்கிடப்பட்டு மக்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் ஒன்ராரியோ மாகாணத்தில் சட்டமன்றத்தின் சுயட்சை உறுப்பினரான ரேண்டி ,covid-19 தொற்று புள்ளிவிவரங்களில் தவறான தகவல்களை வெளியிட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெயர் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தி covid-19 தடுப்பூசியால் இறந்தவர்களை, எந்த பாதிப்பும் இன்றி அவர்கள் உயிரிழந்ததாக தவறான தகவல்களை பதிவு செய்துள்ளார். இவரது சதித்திட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் முறைகேடான தனது செயல்களுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

ரேண்டி உயிரிழந்தவர்களின் திடீர் மரணம் பற்றிய கட்டுரைகளை சமூக ஊடகங்களில் தொடர்ந்து பகிர்ந்துள்ளார். அவரது இடுகைகள் குடும்ப உறுப்பினர்களை ஆத்திரமடையச் செய்ததாகவும் தடுப்பூசி குறித்த குற்றச்சாட்டுக்களை மறுத்ததாகவும் கூறப்படுகிறது.பின்னர் சட்டமன்றம் அவரை கண்டித்துள்ளது.

Covid-19 வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் துயரத்தில் இருக்கும்போது இது போன்ற இடுகைகள் மூலம் அவர்களை மேலும் காயப்படுத்தியதற்காக வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் இடுகைகளை சமூக ஊடகங்களில் இருந்து அகற்றி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். மன்னிப்பு கோரியதை வெள்ளிக்கிழமை இரவு பகிர்ந்துள்ளார்.

கனடிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள தடுப்பூசி மருந்துகள் பாதுகாப்பான மற்றும் பயனுள்ள மருந்துகள் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Covid-19 தடுப்பூசி தொடர்ந்து 30 இறப்புகள் விசாரணையில் உள்ளதாக ஒன்டாரியோவின் பொதுசுகாதாரம் தெரிவித்துள்ளது