கியூபெக் ஆரம்பப்பள்ளியில் மதச் சின்னங்கள் இடம்பெற்ற ஹிஜாப் அணிந்ததற்காக ஆசிரியை வகுப்பறையில் இருந்து நீக்கப்பட்டார் – மசோதா 21 சட்டம்

quebec teacher out from class due to hijjab

கனடாவின் கியூபெக் மாகாணத்தில் ஆரம்பப்பள்ளி ஆசிரியை ஒருவர் ஹிஜாப் அணிந்ததால் மசோதா இருபத்தி ஒன்று சட்டத்தின்கீழ் வகுப்பறையில் அவர் இனி பாடம் நடத்த முடியாது என்று கூறப்பட்டதாக கூறினார். பல மாதங்களாக வெஸ்டன் கியூபெக் பள்ளி வாரியத்தில் மாற்று ஆசிரியையாக பணிபுரிந்த அன்வரி செல்சியா பகுதியிலுள்ள ஆரம்பப் பள்ளியின் தரம் 3 வகுப்பிற்கு கற்பிப்பதற்காக நிரந்தர பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப் பட்டதாக கூறினார்.

தொடக்கப்பள்ளியில் நிரந்தர பணியை இந்த இலையுதிர் காலத்தில் அவர் தொடங்கினார். பின்னர் ஒரு மாதத்திற்கு பிறகு மத குறியீடுகள் இடம்பெற்ற ஹிஜாப் அணிந்திருந்ததால் பள்ளியின் முதல்வர் ஹிஜாப் அணிதல் போன்ற செயல்பாடுகள் வகுப்பறைகளுக்கு வெளியே இருக்க வேண்டும் என்று ஆசிரியையிடம் கூறினார்.

ஆசிரியை மத குறியீடு இடம்பெற்ற ஹிஜாப் அணிந்திருந்தது குறித்து பள்ளிக் குழுவின் மனித வளத்துறை உடன் நடைபெற்ற விவாதத்திற்கு பின்பு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக முதல்வர் ஆசிரியையிடம் கூறினார்.பள்ளி முதல்வர் கூறியது அதிர்ச்சியாகவும் கடினமாகவும் இருந்ததாக ஆசிரியை கூறினார்.

கியூபெக் சட்டத்தின் கீழ் அதிகாரப் பதவி மற்றும் அரசு பணிகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்ற ஆசிரியர்கள் உட்பட மதச் சின்னங்களை அணிய முடியாது. இந்த விதி முறையில் ஆங்கிலப்பள்ளி வாரியங்களுக்கு சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மாகாணத்தின் உச்சநீதிமன்றத்தில் மாண்ட்ரியல் பள்ளி வாரியம் கோரிக்கை வைத்திருந்தது. பள்ளி வாரியத்தின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது