பர்தா அணிந்தால் பணிநீக்கம் – கியூபெக் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பிரதமர் ட்ரூடோ

Justin Trudeau
canada says PM Justin Trudeau

கனடாவின் கியூபெக்கில் சமீபத்தில் இஸ்லாமிய ஆசிரியை ஒருவர் வகுப்பறைக்குள் பர்தா அணிந்து இருந்ததால் பள்ளி வாரியம் அவரை பணியில் இருந்து நீக்கியது. பள்ளியின் முதல்வர் பணி நீக்கம் குறித்து ஆசிரியையிடம் அறிவித்தபோது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக இஸ்லாமிய ஆசிரியை கூறினார்.

இந்நிகழ்வை தொடர்ந்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ “பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுவதை கண்காணிப்பதில் அரசாங்கம் மட்டுமல்ல நாட்டு மக்களும் பங்காற்ற வேண்டும் ” என்று கூறினார்.

ஒரு இஸ்லாமிய பெண்ணிடம் அவள் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவள் என்பதால் அவளது பணியை தக்கவைத்துக் கொள்ள முடியாது என்று கூறும்போது, சுதந்திர நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று மொத்த கியூபெக் மக்களும் ஆச்சரியப்படுவதாக பிரதமர் ட்ரூடோ கூறினார்.

மசோதா 21 சட்டம் பெரும்பான்மையான கியூபெக் மக்களால் ஆதரிக்கப்பட்டிருக்கையில் இந்த நிகழ்வில் மத்திய அரசாங்கம் எவ்வாறு தலையிட முடியும் என்று கியூபெக் மாகாணத்தின் முதல்வர் லெகால்ட் கேள்வி எழுப்பியுள்ளார்.

செல்சியா தொடக்கப்பள்ளியில் தனது பணியைத் தொடங்கி ஒரு மாதத்திற்குப் பிறகு வகுப்பறையில் பர்தா அணிந்ததற்காக பணிநீக்கம் செய்யப்படுவதாக பள்ளி முதல்வர் கூறியதால் இஸ்லாமிய ஆசிரியைக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டதாக அவர் கூறினார்.

கியூபெக் எம்எல்ஏ ராபர்ட் அலுவலகத்தின் முன்பு சமூக உறுப்பினர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒன்றிணைந்து ஆசிரியை பணி நீக்கம் செய்வதற்கு எதிராக குரல் கொடுத்தனர்.