போராட்டத்தை தடுக்க போலீஸ் குவிப்பு – கனடா- அமெரிக்கா எல்லையை கடக்கும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர உயர் நீதிமன்றம் உத்தரவு

கனடாவின் லிபரல் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட Covid-19 ஆணைகளை எதிர்த்து ஆயிரக்கணக்கான லாரி ஓட்டுனர்கள் தலைநகர் ஒட்டாவாவில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தை சுற்றி வளைத்தனர். போராட்டக்காரர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு அரசாங்கத்திடமிருந்து நேர்மறையான முடிவுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. எனவே போராட்டக்காரர்கள் நகரின் முக்கிய பகுதிகளில் போராட்டத்தை விரிவுபடுத்தினர்.

ஒன்ராரியோ மாகாணத்தில் உள்ள windsor மற்றும் அமெரிக்காவின் நகரத்தை இணைக்கும் முக்கிய தூதுவர் பாலத்தில் போராட்டக்காரர்கள் குவிந்தனர். கனடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான முக்கிய எல்லையை கடக்கும் பகுதியில் குவிந்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.

கனடிய அரசாங்கத்தின் Covid-19 சுகாதார கட்டுப்பாடுகளை எதிர்க்கும் போராட்டக்காரர்கள் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வருகின்றனர்.

போராட்டக்காரர்களின் கலவரத்தை முடிவுக்கு கொண்டுவர ஒன்டாரியோ மாகாணத்தின் உயர் நீதிமன்றம் தூதுவர் பாலத்தில் குவிந்துள்ள போராட்டக்காரர்களை அகற்றுவதற்கு காவல்துறையினருக்கு உத்தரவு அளித்தது. இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்களை அகற்றுவதற்கு காவல்துறையினர் மீண்டும் முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

போராட்டம் நடைபெற்று வரும் பாலத்தில் காவல்துறையினர் வாகனங்களை உலவ விடுவதாகவும் ,வேறு யாரும் சம்பவ இடத்திற்கு வராமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒன்டாரியோ உயர் நீதிமன்றத்தின் ஆணையை தொடர்ந்து ஆங்காங்கே எல்லைப்பகுதிகளில் போராட்டக்காரர்கள் ஏற்படுத்தி வரும் போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்கு காவல்துறையினர் தொடர்ந்து காலத்தின் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக்காரர்களின் நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை என்று பொது அதிகாரிகளும் விமர்சகர்களும் தெரிவித்துள்ளனர்