குழந்தைகளுக்கு covid-19 வைரஸ் தொற்று – ஹெல்த் கனடாவின் ஒப்புதலை எதிர்பார்க்கும் பைசர் நிறுவனம்

victoria
victoria dundas

கனடாவில் 12 வயதுக்கு மேற்பட்ட தகுதியுள்ள அனைத்து கனடியர்களுக்கும் covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்துகள் வழங்கப்படுகின்றன. 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி மருந்துகளையும் அங்கீகரிக்குமாறு ஹெல்த் கனடாவிடம் பைசர் நிறுவனம் மதிப்பாய்வு தரவுகளை சமர்ப்பித்துள்ளது.

தற்போது ஹெல்த் கனடா, குழந்தைகளுக்கான covid-19 தடுப்பூசி மருந்துகளை அங்கீகரிப்பது குறித்த முடிவுகளை இரண்டு வாரங்களில் அறிவிப்பதாக தெரிவித்துள்ளது .கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஓரளவு குழந்தைகள் வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்க படுவதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு பைசர் பயோடெக் தடுப்பூசி மருந்தினை பற்றிய மதிப்பாய்வுகள் சோதனை செய்பவர்கள் சுறுசுறுப்பாக செயல்படுவதாக கனடாவின் தலைமை மருத்துவ ஆலோசகர் சுப்ரியா ஷர்மா செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

Covid-19 வைரஸ் தொற்று பரவ தொடங்கியதிலிருந்து குழந்தைகளுக்கு லேசானதாக காட்டப்படுகிறது. ஆனால் சில குழந்தைகளுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதனால் பிற குழந்தைகளுக்கு தொற்று பரவக்கூடும். கனடாவின் தலைமை மருத்துவ அதிகாரி தெரசா டாம் தடுப்பூசி மருந்துகளுக்கு தகுதியில்லாத வயது பிரிவினருக்கு covid-19 வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்தார்.

ஹெல்த் கனடாவின் ஒப்புதலுக்கு பிறகு 2.9 பில்லியன் covid-19 பைசர் தடுப்பூசி மருந்துகள் வழங்கப்படும் என்று கனடாவின் மத்திய அரசாங்கம் கடந்த மாதம் அறிவித்தது.