கனடாவில் ஆறு வயது குழந்தைகளுக்கு பைசர் தடுப்பூசி மருந்து – ஹெல்த் கனடா

Ontario
public health precautions following the confirmed cases of a potentially more transmissable variant of the coronavirus

கனடாவில் covid-19 வைரஸ் தொற்றின் நான்காவது அலையை தவிர்ப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி மருந்துகள் தகுதியுள்ள கனடியர்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன. அடுத்த கட்ட நடவடிக்கையாக 12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி மருந்து செலுத்துவதற்கான சோதனைகள் நடத்தப்படுகின்றன.

கனடாவில் 5 முதல் 11 வயது உடைய குழந்தைகளுக்கு வழங்குவதற்கு பைசர் covid-19 தடுப்பூசி மருந்துகள் தனது தொடக்ககால ஆராய்ச்சிகளை ஹெல்த் கனடாவிற்கு சமர்ப்பித்துள்ளது. பைசர் தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்பவர் சனிக்கிழமை தெரிவித்தார். குழந்தைகளுக்கு வழங்க இருப்பதால் தடுப்பூசி மருந்துகளின் சோதனை தரவை மறு ஆய்விற்காக முறையே கூட்டாட்சிக்கு சமர்ப்பிக்கிறது .

இந்த மாத இறுதியில் பைசர் தடுப்பூசி மருந்து நிறுவனத்தின் முறையான சமர்பிப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5 முதல் 11 வயது குழந்தைகளுக்கான தரவுகளை மின்னஞ்சல் வாயிலாக ஹெல்த் கனடாவுக்கு பைசர் சமர்ப்பித்ததாக கூறப்படுகின்றன.

தடுப்பூசி மருந்து முழு அங்கீகாரத்தைப் பெறுவதற்கான சமர்ப்பிப்பாக அமையுமென்று பைசர் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கிறிஸ்டினா அன்டோனியா தெரிவித்தார். பைசர் தடுப்பூசி மருந்து தகுதியுள்ள கனடியர்களுக்கு வழங்குவதற்கு கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கனடாவில் அங்கீகரிக்கப்பட்டு அனுமதியளிக்கப்பட்டது .

ஆறு மாத குழந்தை முதல் 5 வயது குழந்தை வரை பைசர் covid-19 தடுப்பூசி மருந்தின் எதிர்வினை மற்றும் செயல்திறனை மதிப்பிடும் சோதனைகள் நடந்து கொண்டிருக்கிறது .சோதனை முடிவுகள் ஆண்டின் இறுதிக்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது