எட்டோபிகோக் பகுதியில் ஆலங்கட்டி மழை – கனமழை மற்றும் புயல் காரணமாக சேதமடைந்த பகுதிகள்

peel flooding

நகரின் மேற்கு பகுதிகளில் சனிக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது. பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. டொரன்டோ நகரத்திற்கு மாலை 6 மணிக்குப் பிறகு இடியுடன் கூடிய கனமழை , ஆலங்கட்டி பொழிவு மற்றும் மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று சுற்றுச்சூழல் கனடா எச்சரிக்கை விடுத்தது.

புயல் எச்சரிக்கை அடுத்த சில மணி நேரங்களிலேயே புயல்கள் ஒன்டாரியோ ஏரியின் தெற்கு பகுதிக்கு நகர்ந்தது. இதனையடுத்து இரவு 8:17 மணிக்கு பின்பு எச்சரிக்கை நீக்கப்பட்டது.

புயல் எச்சரிக்கை மற்றும் இடியுடன் கூடிய கனமழை காரணமாக கிட்டத்தட்ட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மின்சாரமின்றி இருந்தனர். பின்பு காலை 11 மணிக்கு பிறகு சுமார் 4,000 வாடிக்கையாளர்களை தவிர மற்ற அனைவருக்கும் மின்சாரம் வழங்கப்பட்டதாக டொரன்டோ ஹைட்ரோ வாரியம் தெரிவித்தது.மேலும் மின்சாரம் முழுவதுமாக மீட்கப் படுவது குறித்த விபரங்களை வெளியிடவில்லை.

புயல்களின் விளைவாக பெரும் சேதம் தொடர்பான அழைப்புகள் எட்டோபிக்கோக்கில் தொடர்ந்து வருவதாக டொரன்டோ தீயணைப்பு துறை தெரிவித்தது. வானிலை மாற்றம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்தனர்.

மின்சாரக் கம்பங்கள் மீது மின்னல் தாக்கியதால் அப்பகுதியில் உள்ள மின் இணைப்பு திடிரென நிறுத்தப்பட்டுள்ளது. கட்டிடங்களுக்குள் உள்ள லிப்ட்களுக்குள் சிக்கியுள்ளதாக 20க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளதாக தெரிவித்தனர்.

ஒரு மணி நேரத்திற்குள் 50 மில்லி மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என்று சுற்றுச்சூழல் கனடா அறிவித்திருந்தது. டொரண்டோவில் இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளது தொடர்ந்து 29 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பநிலை நாளை பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் காற்றின் ஈரப்பதத்தின் அளவு 39ஐ நெருங்கும் என்றே கூறப்பட்டுள்ளது.