டொரன்டோ பியர்சன் விமான நிலையத்திற்கு பயணிகள் முன்கூட்டியே புறப்பட வேண்டும் – பியர்சன் விமான நிலையம்

face mask
Protest Against Face Mask Canada

டொரன்டோ பியர்சன் விமான நிலையத்தில் “முகமூடி எதிர்ப்பு போராட்டம் ” நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே சனிக்கிழமை புறப்படவிருக்கும் பயணிகள் முன்கூட்டியே விமான நிலையத்திற்கு வருமாறு பியர்சன் விமான நிலையம் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.முகமூடி எதிர்ப்பு போராட்டம் நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போராட்டத்தின் தாக்கங்கள் எதிர்பாராதது. Terminal 3 இலிருந்து புறப்பட வேண்டிய பயணிகள் அதிகாலையில் விரைவில் வருவதன் மூலம் விமானங்களில் தாமதமின்றி செல்ல இயலும் என்று விமான நிலையம் கூறியுள்ளது.இதுகுறித்த தகவலை பியர்சன் விமான நிலையம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

பொது சுகாதார விதிமுறைகளுக்கு இணங்க, இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் தவிர, விமான நிலைய ஊழியர்கள் மற்றும் பயணிகள் போன்ற அனைவரும் சாப்பிடும்போது மற்றும் குடிக்கும்போது தவிர்த்து அனைத்து நேரங்களிலும் விமான நிலையத்திற்குள் முக கவசம் அணிய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

நான்காவது அலை தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கும், மருத்துவ நிபுணர்களின் அறிவுரைகளை பின்பற்றுவதற்கும் நாட்டு மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே விரைவில் covid-19 வைரஸ் தொற்றிலிருந்து விடுபட முடியும்.முக கவசம் மற்றும் சமூக இடைவெளி போன்றவற்றை முறையாக கடைபிடிக்க வேண்டும்.

உலகின் பல்வேறு நாடுகளில் Covid-19 வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு மக்கள் உயிரிழந்து வருகின்றனர். டெல்டா மாறுபாடு போன்ற அச்சுறுத்தும் வைரஸ் தொற்று தீவிரமடைந்தால் மக்களை காப்பாற்றுவதில் சிரமம் ஏற்படும். எனவே தடுப்பூசி மருந்து முழுமையாக பெற்றுக்கொண்டு Covid-19 கட்டுப்பாட்டு விதிமுறைகள் அனைத்தையும் முறையாகப் பின்பற்றுவது சிறந்த வழிகாட்டுதல் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.