ஒரே நாளில் செயலாக்கப்பட்ட covid-19 பரிசோதனைகள் – ஒன்டாரியோ

corona in canada, canada corona, covid 19, கொரோனா, கனடா,

ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் அத்தியாவசியமற்ற இடங்களுக்கு தடுப்பூசி சான்றிதழை கட்டாயமாக்கி அறிவித்துள்ளது. தடுப்பூசி சான்றிதழ் மூலம் தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்கள் மற்றும் பெறாதவர்களை எளிதாக வித்தியாசம் கண்டறிய முடியும். ஒன்டாரியோவில் தினசரி பதிவாகும் Covid-19 வழக்குகளின் எண்ணிக்கை மாறுபட்டு வருகிறது.

கடந்த புதன்கிழமை 463 covid-19 வைரஸ் தொற்று வழக்குகள் பதிவாகியிருந்தன.வியாழக்கிழமை திடீரென உயர்ந்து 864 covid-19 வழக்குகள் பதிவாகின. இன்று கணிசமாக குறைந்து 677 covid-19 வழக்குகள் பதிவாகி உள்ளது என்று மாகாண அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரே நாளில் 700க்கும் குறைவான covid-19 வைரஸ் தொற்று வழக்குகள் கண்டறியப்பட்ட சூழலில் இன்று புதிய covid-19 வைரஸ் தொற்றுக்கள் எண்ணிக்கை வாரந்தோறும் குறைந்து வருவதாக ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் கூறுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 37,630 covid-19 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. பரிசோதனை முடிவுகளில் நேர்மறை விகிதம் பெற்றவர்கள் 1.9% சதவீதம் ஆகும். கடந்த வாரம் பரிசோதனை முடிவுகளில் நேர்மறையான முடிவுகளை பெற்றவர்கள் 2.4 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். சென்ற வாரத்தை விட இந்த வாரம் covid-19 தொற்றின் தாக்கம் குறைவு ஆகும்.

70 சதவீத ஒன்டாரியோ மக்கள் covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிரான கனேடிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட covid-19 தடுப்பூசி மருந்துகளை முழுமையாக பெற்றுள்ளனர்.தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. ஒரே நாளில் வைரஸ் தொற்றினால் ஏழு மரணங்கள் பதிவாகியுள்ளன.

டொரன்டோ 136 covid-19 வழக்குகளையும் ,யார்க் 73 வழக்குகளையும் மற்றும் பீல் 76 வழக்குகளையும் பதிவு செய்துள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன.