தடுப்பூசி செலுத்தியவர்கள் திருமணத்தில் பங்கேற்கலாம்

Whitchurch-Stouffville
Wedding with corona virus restrictions. (Ivanova Tanja/Shutterstock)

திருமணத்திற்கு அனைத்து உறவினர்களும் வருகை புரிய வேண்டும் என்று விரும்பும் குடும்பங்களுக்கு Covid-19 தடுப்பூசி போடவேண்டும் என்று திருமணம் திட்டமிடுபவர்கள் தெரிவித்துள்ளனர். தற்பொழுது கனடா முழுவதும் பெரிய அளவிலான திருமணங்கள் நடத்தப்பட்டு வருவதால் திருமணத்தில் பங்கேற்பவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் நிகழ்ச்சியானது பாதுகாப்பானதாக அமையும் என்று திருமணம் திட்டமிடுபவர்கள் கூறியுள்ளனர்.

கல்கேரியில் அமைந்துள்ள பொட்டிக் திருமணம் மற்றும் நிகழ்ச்சியின் நிறுவனரான அலெக்ஸாண்ட்ரா, அவரது வாடிக்கையாளர்கள் பலரும் தங்களது நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவரும் குறைந்தபட்சம் முதல் கட்ட தடுப்பூசி மருந்து மட்டுமாவது செலுத்தி இருக்க வேண்டுமென்று கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழலில் மக்களில் சிலர் இன்னும் அச்சத்தில் உள்ளனர்.குறிப்பாக மாறுபட்ட டெல்டா வைரஸ் மக்கள் அனைவரையும் அச்சுறுத்தி வருவதாக அவர் கூறியுள்ளார். இப்பொழுது அனைத்து திருமணங்களுக்கும் நிறைய இணையதளம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

திருமணங்களின் நிறுவனர் பிளட்சர் அவரது வாடிக்கையாளர்கள் அனைவரும் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்ற விதியை அதிக அளவில் விரும்புவார்கள் என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

பெரிய அளவில் நடத்தப்படும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களாக இருந்தால் அனைவருக்கும் பாதுகாப்பான முறையாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் திருமணத்தில் பங்கேற்பவர்கள் தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களாக இருந்தால் கோவிட் பரிசோதனை ,சனிடைசர் உபயோகித்து கை கழுவுதல், மற்றும் முக கவசம் அணிதல் போன்றவற்றை முறையாக  கடைபிடிப்பதால் சாத்தியமாகும் என்று கூறியுள்ளார்.