குறைத்து மதிப்பிட வேண்டாம் – போராட்டக்காரர்களின் அச்சுறுத்தல் மற்றும் இடையூறுகளை பற்றி கூறும் விமர்சகர்கள்

Ottawa
Ottawa bridge

கனடாவில் லிபரல் அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் எல்லையை கடப்பதற்கான covid-19 ஆணைகள் போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நடந்து வரும் ஒட்டாவா போராட்டத்தில் எந்த ஒரு உடல்ரீதியான வன்முறையும் நடைபெற்றதாக காவல்துறையினர் தெரிவிக்கவில்லை. ஆனால் விமர்சகர்கள் வார இறுதி ஆர்ப்பாட்டங்களில் அமைதியுடன் கூடிய அபாயங்களை குறைத்து மதிப்பிடுவதாக கூறினார்.

இரண்டு நாட்களாக போராட்டத்தில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்களின் கூட்டம் மற்றும் சாலையில் குவிக்கப்பட்ட லாரிகள் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கிருந்த சில எதிர்ப்பாளர்கள் நினைவுச் சின்னங்களை சேதப்படுத்தி, வன்முறையைத் தூண்டினர்.

நகரப் பணியாளர்கள், அதிகாரிகள் மற்றும் பிற நபர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வது மற்றும் பொதுமக்களின் வாகனங்களுக்கு சேதம் விளைவிப்பது என பல்வேறு செயல்பாடுகளையும் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வரை வன்முறை தொடர்பாக போராட்டக்காரர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் ஒட்டாவாவில் நடைபெற்றுவரும் போராட்டமானது உள்ளூர்வாசிகளுக்கு மிகுந்த சிரமம் மற்றும் இடையூறை விளைவிப்பதாக டவுண்டவுனுக்கான கவுன்சிலர் கேத்தரின் மெக்கன்சி கூறினார்.

பல சமூக ஊடகங்களில் போராட்டங்களை அமைதியானது என்று விவரிக்கப்பட்டுள்ளது. இது போராட்டங்கள் ஏற்படுத்திய சேதம் மற்றும் இடையூறுகள் போன்றவற்றை குறைவாக மதிப்பிடுவதாகவும் கல்வியாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் கூறியுள்ளனர்