அரசாங்கத்தின் விதிமுறையை கைவிடுமாறு கனடாவின் மிகப்பெரிய விமான நிறுவனங்கள் கடிதம் – அமெரிக்காவை தவிர்த்து மற்ற நாடுகளுக்கு Covid-19 சோதனை கட்டாயம்

Toronto
An almost-empty Terminal 3 is shown at Pearson International Airport in Toronto, Friday, March 13, 2020

கனடாவின் மிகப்பெரிய விமான நிறுவனங்கள் மற்றும் பயணிகள் நெருக்கடி அதிகமுள்ள நாட்டின் பரபரப்பான சர்வதேச விமான நிலையங்களுக்கு கட்டாய covid-19 வருகை சோதனை தேவைப்படும் என்று மத்திய அரசாங்கம் அறிவித்திருந்தது.

தீவிரமாக பரவி வரும் covid-19 மற்றும் ஓமிக்ரோன் மாறுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மத்திய அரசாங்கம் இந்த முடிவை எடுத்தது. ஆனால் இந்த விதிமுறையை கைவிடுமாறு விமான நிறுவனங்கள் மத்திய அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றன.

ஏர் கனடா, வெஸ்ட் ஜெட் மற்றும் டொரன்டோ பியர்சன் ஆகிய விமான நிறுவனங்கள் ஒன்டாரியோ மற்றும் கூட்டாட்சி அரசாங்கத்திற்கு கடிதம் எழுதின. கடிதத்தில் விமான நிலையங்களில் இருந்து covid-19 சோதனை திறனை மாற்றுவதற்கு விமான நிறுவனங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

கனடாவின் பல்வேறு மாகாணங்களிலும் கடந்த சில வாரங்களாக covid-19 வழக்குகள் அதிகரித்து வருகின்றன. Covid-19 வைரஸ் தொற்றினால் மருத்துவமனைகளில் வேகமாக பரவக்கூடிய அமைப்புகளில் இருப்பவர்களுக்கு PCR பரிசோதனையை எடுப்பதற்கு மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது.கனடாவிற்குள் நுழையும் பயணிகள் Covid-19 பரிசோதனையில் எதிர்மறையான முடிவுகளை பெற்றிருக்க வேண்டும்.

அமெரிக்காவை தவிர்த்து மற்ற நாடுகளிலிருந்து கனடாவிற்குள் நுழைபவர்கள் மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு முடிவுகள் கிடைக்கும் வரை அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட வேண்டுமெனவும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.அமெரிக்காவில் இருந்து வருபவர்களுக்கு Random முறையில் சோதனை நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.